0
389

சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் நவமி நாளில் எந்த சுபகாரியத்தையும் செய்யாது பெரும்பாலோர் புறக்கணித்து விடுவதுண்டு. நவமி திதியில் அன்னை சரஸ்வதி தேவியை வணங்கி, அனைத்துக் காரியமும் சுபமாக நடைபெறும். மேலும், நவமி தினத்தன்றுதான் ராமர் பிறந்ததால் அந்நாளில் இறை வழிபாட்டிற்கு முக்கியத்துவம் கொடுப்பது மிகவும் சிறந்ததாகும். அதையடுத்து, நவமி அன்று விரதமிருந்து வழிபாடு செய்திடலாம் அல்லது எப்போதும் போல் நாம வழிபாடு மற்றும் பூஜை செய்தும் வழிபடலாம்.

வெற்றியை

விரதம் இருந்து வழிபாடு செய்பவர்கள் அன்று முழுவதும் உபவாசம் இருப்பது நல்லது. திரவ உணவுகளை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். வீட்டிலேயே காலை, மாலை என இரு வேளை பூஜை செய்து மாலையில் பூஜை நிறைவு பெற்ற பின்னர் விரதத்தை முடித்துக் கொள்ளலாம். விரதம் இருக்க முடியாதவர்கள் காலை மாலை என இருவேளையும் பூஜை செய்வது அவசியமாகும். குறிப்பாக காலையில் செய்யும் பூஜை காலை 9 மணிக்குள் முடித்து விடவேண்டும். அப்போது, ஸ்ரீராமஜெயம் மந்திரத்தை எத்தனை முறை எழுத முடியுமோ அத்தனை முறை எழுதி ராமனின் அருளுக்கு மட்டுமன்றி, ராம பக்தனாகிய ஆஞ்சநேயர் அருளுக்கும் பாத்திரமாகலாம். இன்று நவமி தினத்தையொட்டி, ராமா நாம ஜெபத்தில் மூழ்கி வாழ்வில் வெற்றியை காணுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 17 = 27