18 அடி உயரம் கொண்ட சிவலிங்கம் கோவில்

0
152

18 அடி உயரமும், 7.5 அடி அகலமும் உடைய ஒரே கல்லால் செதுக்கப்பட்ட சிவலிங்கம் தான் போஜேஸ்வர்.

போபாலை ஆண்ட மன்னர் போஜ் அவர்களால் கிபி 1010 முதல் 1055 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டது தான் இந்த போஜேஸ்வர் கோவில்.

மத்தியபிரதேச தலைநகர் போபாலில் இருந்து 30 கிமீ தொலைவில் மலைமீது உள்ளது இக்கோவில்.

இக்கோவிலுக்கு பின்புறம் ஒரு சரிவான இடம் உள்ளது. அங்கு தான் இக்கோவில் கட்ட தேவையான கற்களை மலைமீது இருந்து உருட்டி கொண்டு வருவார்களாம். கிட்டத்தட்ட 40 வருடங்களுக்குள் கட்டப்பட்டதாக சொல்லப்பட்டாலும் இக்கோவில் முழுமையாக கட்டப்படாமலே விடப்பட்டுள்ளது.

Archeological Survey of india துறையின் கீழ் இக்கோவில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

போபால் செல்லக்கூடிய நண்பர்கள் அவசியம் சென்று பார்க்க வேண்டிய இடம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

35 − = 26