பிரதமர் உரைக்கான ஜோதிட விளக்கம்

0
350

சிறிது நேரத்திற்கு முன்பு நமது பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் உரையின் பின்னணியில் இருக்கும் ஜோதிடத் தகவலை காணலாம்.

பொதுவாக மஞ்சள் வண்ண ஒளியைக் குறிக்கும் கிரகம் குருவாகும். குரு கிரகம் சூரியனிடமிருந்து பெறும் ஒளியை இரண்டு மடங்காக பூமிக்கு பிரதிபலிக்கும்.

வரும் ஞாயிறு ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள், ஒவ்வொருவரும் தீப ஒளியை ஏற்றி வைப்பதால், குருவின் காரகத்துவம் மக்களிடையே அதிகரிக்கும். தற்போது கோச்சாரத்தில் குரு மகரத்தில் நீச்சம் நிலையில் இருப்பதால், மக்கள் இவ்வாறு தீபங்களை ஏற்றி குருவின் நீச்ச தன்மையை நீக்கி குரு கிரகத்தை பலப்படுத்திக் கொள்ளலாம்.

இதுபோன்ற தீபங்களை ஏற்றி வழிபடுவது நாம் கோவில்களில் காண முடியும். கோவில்கள் என்பது குருவின் பலம் நிறைந்த இடம், ஆகவே அங்கு அதிகமாக விளக்குகள் ஏற்றப்படுகிறது. அதுபோல நாம் இருக்கும் வீட்டினுள் ஒவ்வொரு நாளும் தீபமேற்றி வழிபடும் பொழுது வீட்டில் குருவின் காரகத்துவம் பலம் பெறும். இதனால் மன ஒற்றுமை, சாத்வீகம், பக்குவம், பொருளாதார உயர்வு, நுண்ணறிவு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

இதுபோல இந்திய மக்கள் அனைவரும் ஒரே நேரத்தில் தீப ஒளி மூலம் நாட்டினுள் நேர்மறை அதிர்வுகளை உருவாக்கலாம். இந்த ஜோதிட சூட்சுமத்தை பாரத பிரதமர் மக்களிடையே அறிவித்து அதை பின்பற்ற சொல்கிறார்.

வரும் ஞாயிறு இரவு ஒன்பது மணிக்கு விருச்சிக லக்கனம் உதயமாகிறது. விருச்சிக லக்னத்திற்கு குரு 2 மற்றும் 5ம் அதிபதியாக வருகிறார். ஆதலால் குருவின் காரகத்துவத்தை அதிகரிக்க செய்யவே இந்த முயற்சி. கோச்சாரத்தில் குரு அதிசாரம் ஆகி இந்தியாவைக் குறிக்கும் மகர ராசிக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தீபமேற்றும் பழக்கம் பிற மதங்களில் இல்லாத காரணத்தால் பாரதப்பிரதமர் அவர்கள் மெழுகுவர்த்தியில் தீபம் ஏற்றியும், செல்போன் டார்ச்சிலிருந்து வெளிவரும் ஒளியையும் பயன்படுத்த சொல்கிறார். பிரபஞ்சத்தின் இயக்கம் கோள்களால் அமைகிறது என்பதை மக்கள் உணரவேண்டிய தருணமிது. ஆதலால் நமது பாரதப் பிரதமர் கூறிய படி அனைவரும் செய்து உலக நலனை காப்போம்.

#modi #april5deepam #jothidam

தனித்திரு விழித்திரு வீட்டில் இரு.

இது போன்ற விஷயங்களை மேலும் அறிந்து கொள்ள எங்கள் ஆண்ட்ராய்டு App ஐ download செய்யுங்கள். லிங்க் கீலே உள்ளது.

https://play.google.com/store/apps/details?id=com.mcc.swamydharisanam

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 74 = 75