நாளை ராம நவமி அன்று எப்படி வீட்டில் விரதம் இருப்பது?

0
384
ramanavami

பொதுவாக ராமநவமி அன்று பெருமாள் கோவிலுக்கு சென்று ராமரை வழிபாடு செய்தால் நினைத்த காரியம் வெற்றியாகும், அனால் தற்போது உள்ள சூழ்நிலையில் நாம் காரோண வைரஸ் காரணமாக வெளியில் செல்ல இயலாது அதே போல் கோவில்களும் மூடப்பட்டுள்ளது.
இதன் விளைவாக நாம் எப்படி நாளை வீட்டிலே பூஜை மற்றும் விரதம் இருக்கலாம் என்று பாப்போம்.
காலையில் எழுந்து, குளித்து முடித்த பிறகு வீட்டில் உள்ள ராமர் படத்தை வைத்து பால் பாயசம் செய்து துளசி அர்ச்சனை செய்யலாம்.
பால் பாயசம் எதற்காக என்றல் ராமர் பால் பாயசத்தில் தான் ராமர் அவதாரம் எடுத்தார், ஆகையால் பால் பாயசம் இதற்கு உகந்தது.
அதே போல் நாமும் இருவேளை சாப்பிடாமல் இருந்து ராமாயணம்,சுந்தரகாண்டம் படிக்கவேண்டும், அப்போது ஸ்ரீ அனுமனையும் மனதில் வைத்து படிக்கச் வேண்டும் என்னயென்றால் அனுமானிற்கு கேக்கும் ஆற்றல் உள்ளது.
பால் பாயசம் மட்டும் இல்லாமல் கூடவே வடை,பானகம்,சக்கரைப்பொங்கல்,துளசி தீர்த்தம் அனைத்தும் சேர்த்து கொள்ளலாம்.
முடிந்தவரை 108, 1008 தடவை “ஸ்ரீ ராம ஜெயம்” எழுதவேண்டும்.
காலை முதல் இரவு தூங்கும் வரை ராமர் சிந்தனை இருக்க வேண்டும்.
இவ்வாறு கடை பிடித்தால் ராமர் அருள் நமக்கு நிச்சயம் கிடைக்கும்.

இப்போதைக்கு இருக்கும் சூழ்நிலையில் மக்கள் யாரும் வெளியே போகாமல் வீட்லே நாம் வழிபாடு செய்தால் நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்லது .

“ஜெய் ஸ்ரீராம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 11 = 21