நரகலோக தண்டனைகள்

0
479

நம்பிக்கை என்ற
இந்த ஐந்து எழுத்தில் உன் வாழ்க்கை என்ற நான்கு எழுத்து வெற்றி என்ற மூன்றெழுத்தை பெற்றிட ஓம் என்ற இரண்டு எழுத்தை உறக்க சொல்லி பிரபஞ்சத்தின் பேராற்றலை உனதாக்கி கொள்.
மகிழ்ச்சி
தன் மகன் கூறிய செய்திகளைக் கேட்டு வியப்புற்ற அந்தணர் நரகத்தில் என்னென்ன பாவத்திற்கு, என்னென்ன தண்டனை என்று கூறுமாறு கேட்க மகன் தந்தைக்கு நரகலோக தண்டனைகள் பற்றிக் கூறலானான். (நரக லோகங்களின் வகை, தண்டனைகள் பல விதம் பற்றி அக்னி புராணம், விஷ்ணு புராணங்களில் கூறிய செய்திகளையும் காண்க).

பாவத்திற்கேற்ற தண்டனைகள் கூறப்பட்டுள்ளன.

  1. பிறர் மனைவியை காமக்கண் கொண்டு நோக்கியவர்களின் கண்கள் இரும்புமுகம், நீண்ட அலகுள்ள கொடிய பறவைகளால் கொத்திப் பிடுங்கப்படும்.
  2. குருவை அவமதித்தல், சாஸ்திரத்தைச் சாதுக்களைக் கேலி செய்தல், கோள் சொல்பவர்கள் நாக்கு இடுக்கிகளால் பிடுங்கப்படும்.
  3. விருந்தோம்பாமல் தான் மட்டுமே உண்டு மகிழ்பவன் மலம், சிறுநீர், குருதி போன்றவற்றை உணவாகக் கொள்ளச் செய்யப்படுவர்.
  4. அக்கினி, குரு, பசு ஆகியவற்றை காலால் தீண்டியவன் கால்கள் வெட்டப்படும்.
  5. தெய்வநிந்தனை, குருவை இகழ்தல் செய்வதைக் கேட்டவர் காதில் இரும்பு ஆணி அடிக்கப்படும்.
  6. தீர்த்தத்தில் மலம், சிறுநீர் கழிப்பவன் கல்லுக்குள் தேரையாய்ப் பிறப்பான்.
  7. நீசனிடம் தானம் கேட்டோர், யாசகர், குருவிடம் பொய் கூறியோர் நாயாகப் பிறப்பர்.
  8. தானியத்தை திருடியவன் எலியாகவும், சகோதரர் மனைவியைக் கெடுத்தவன் குயிலாகவும், குரு பத்தினியைக் கூடியவன் பன்றியாகவும், உணவு பால் திருடியவன் கொக்காகவும், கொழுந்து விட்டு எரியாத தீயில் ஓமம் செய்தவன் செரிமானம் இன்றி அவதிப்படுபவனாகவும் பிறப்பர்.

இப்படி வேறு, வேறு பாவங்களுக்கு ஏற்ப ஏராளமான தண்டனைகள் நரகத்தில் அளிக்கப்படும். எனவே மனிதன் பாவத்திற்கு ஏற்ற தண்டனை நரகில் நிச்சயம் என்று அறிந்து புண்ணியத்தையே சம்பாதிக்க வேண்டும்.

இவ்வாறு கூறியபின் தந்தையிடம் வாழ்க்கையில் சுகங்கள் அனுபவித்தல் என்றும், தர்மங்களைச் செய்தல் என்றும் கூறி இனி வனம் சென்று வனப்பிரஸ்தா சிரமத்தை அனுசரிக்குமாறு கூறினான்.

அதுகேட்டு தந்தை, மகனிடம் அவன் ஞானத்தை உபதேசித்ததால் குருவானான் என்றும், மேலும் ஞானமார்க்கத்தை விளக்குமாறும் கேட்டார். அப்போது மகன் கீழ்க்கண்ட முக்கியமானவற்றைக் கூறினான். கணவனைத் தெய்வமாகக் கொள்வது, மற்ற தர்மங்களை விடச் சிறந்தது. கற்புடைய பெண்டிரை மும்மூர்த்திகளும் அறிவர். அவர்கள் பேச்சுக்கும் கட்டுப்படுவர் என்று அதை விளக்க நளாயினி கதையையும், இறுதியில் அனுசூயாவின் சிறப்பையும் கூறினான் மகன்.

தொடரும்…

ஓம் ம்ருத்யுன்ஜெய லிங்கமே போற்றி!

🌷🌷🌷

மனிதனின் “விதி” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

விதியை மதியால் வென்றிடலாம். வினை விதைத்தவன் வினை அறுப்பான்… விதை விதைத்தவன் விதையறுப்பான்…! என்ற பெரியோர்களின் வாக்கிலேயே கலந்துள்ளது
மனிதனின் விதி முறை…!”

வினையின் எண்ண\த்திலே விளைவதெல்லாம் வினையேதான்.
1.பிறரைக் கவிழ்க்க வினை செய்கின்றான்.
2.அந்த வினை அவனைக் கவிழ்ப்பதற்காகச் செய்த வினை
3.இவனைத் தான் வந்து சுற்றும்.
4.வினை செய்த காலத்தில் வருவது அல்ல அந்த வினை.
5.இவன் எண்ணத்திலே ஊன்றியுள்ள வினையினால் இவனையே அந்த வினை சுற்றுகிறது பெரும் பயத்தினால்.

அந்த நிலையில் உள்ளவனின் ஆவி பிரியும் பொழுது வினையின் எண்ணத்திலேயே ஆவி உலகத்திலும் தன் வினையை முடித்துக் கொள்ள ஒரு உடலை எடுக்கின்றான்.

வினைப் பயனை முடித்திடுவது தான் அவ்வாவிகளின் எண்ணமெல்லாம். வினையின் எண்ணத்தை மனதினுள் சிறு அளவு ஊன்றச் செய்தாலும் அந்த வினையின் பயன் பல கோடி ஆண்டுகளுக்கு முடிவுறுவதில்லை.

ஜென்மப் பிறவியில் எல்லாம் அவனுடனே தான் சுற்றிக் கொண்டு வருகிறது காலப் போக்கில். அந்த எண்ணம் உடையவனை எந்தச் சொல்லும் சொல்லி மாற்றிட முடியாதப்பா.
1.கர்ம பயன் என்பதெல்லாம் இதுவேதான்.
2.அவன் செய்த கர்மம் அவனை அழிக்கின்றது என்பதெல்லாம் இதுவே தான்.
3.எந்தப் பிறவி எடுத்தாலும் இக்கர்ம பயன் முடிவதில்லை. (புழுவாகப் பூச்சியாக உருவெடுக்கின்றான்)

வினை விதைத்தவனுக்கு என்றுமே சுற்றிக் கொண்டே தானிருக்கும். எந்த நற்சொற்களும் அந்த வினையுள்ள எண்ணத்திலே பதிந்திடாதப்பா. பாவ புண்ணியம் எண்ண மாட்டான். ஆகவே நரக லோகம் செல்கின்றான்

நரகலோகம் என்பதுவே கர்ம பயன் செய்தவன்… வினையின் நெஞ்சம் உள்ளவன்…! எல்லாம் செல்லுமிடம் நரகலோகம்தான்.

விதி என்பது எதப்பா…?

விதியையும் மதியினால் வெல்லலாம் என்பது வினையின் எண்ணம் உள்ளவனை நல்லெண்ணம் கொண்டவன் வென்றிட முடியுமப்பா.

வினையில் உள்ளவன் அவனைத் தாக்கும் பொழுது நல்லெண்ணம் கொண்டவன் அந்த “ஈசனை…” நினைத்திட்டால் அவ்வினையின் எண்ணத்தை ஈசனே பார்த்துக் கொள்வான்.

எந்த வடிவில் ஈசன் பார்த்திடுவான் என்றிடுவாய்…!

வழக்கின் வழியைப் புரியும்படிச் சொல்கின்றேன்.

வினையெண்ணம் உள்ளவனும் நல்லெண்ணம் படைத்தவனும் ஒரு இடத்தில் இருவரும் சேர்ந்து செய்யும் தொழிலில் அந்நிலையில் உள்ள பணத்தை எல்லாம் வினைப்பயன் உள்ளவன் எடுத்துக் கொள்கின்றான். அந்தப் பழியை நல்லவனின் மேல் சுமத்துகின்றான்.

நல்லவனுக்குப் பக்கபலமும் இல்லை. அந்த நிலையில் வழக்காடும் இடத்திற்குச் சென்றால் அந்த நிலையிலும் தன்னுடைய செல்வத்தை வைத்து ஜெயித்து விடுகின்றான் இவ்வினையுள்ளவன்.

பெரும் வழக்கறிஞர்கள் வைத்து வழக்காட நல்லெண்ணம் உள்ளவனுக்கு நாதியில்லை என்பார்கள். ஏனப்பா இல்லை…?

சில காலம் உள்ள இந்த ஜென்மத்தில் நாதி இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவன் எண்ணத்திலே ஒரு நிலையில்
1.ஒரு உயர்வின் தன்மையிலே சுற்றிக் கொண்டு உள்ளது…
2.“நல்லொழுக்கங்கள் நற்சொற்கள் எல்லாமே…!”

அப்படி இருக்கும் நிலையில்
1.அவன் மனதில் சோர்வை எண்ணிடாமல்
2.அவ்வாண்டவனை நினைத்துச் சத்திய நியாயத்தை வேண்டிட்டால்
3.அவன் ஜென்மப் பயன் எல்லாமே… அவன் எண்ணத்தில்… அவன் விடும் சுவாசத்தில்…
4.உயர்ந்த தன்மையிலேயே ஜென்மங்கள் மாறும் பொழுதும் வந்தடைகிறது.
5.கடைசியில் ஜெயிப்பது நல்லெண்ணம் கொண்டவன்தான் என்பது இம்மானிடர்களுக்குப் புரிவது இல்லை.

வினை விதைத்தவன் இவன் காலத்தில் வழக்கில் ஜெயித்தாலும் அவன் எண்ணத்தில் சுற்றிக் கொண்டு இருக்கும் அவன் செய்த வினையின் பயன் அவன் காலம் முடிந்து அவன் எந்த நிலைக்குச் சென்றாலும் அவனைச் சுற்றிக் கொண்டே தான் வருகிறது.
1.வினைப்பயன் செய்தவன் நரகலோகத்திற்கே செல்கின்றான்.
2.இந்த நல்லோரின் இதயம் செல்லும் இடம் தான் சொர்க்க லோகம் என்பது.

அவன் செல்லும் நரக லோகத்திற்கும் இவன் செல்லும் சொர்க்க லோகத்திற்கும் தான் “விதியை மதியால் வெல்லலாம்…!” என்பது.

புண்ணியமிக்கவர்களே, பிறந்து இறந்து மீண்டும் பிறந்து இடைவிடாது தொடர்ச்சியாக பயணிக்கும் பயணமே பிறவிப்பயணம் எனப்படுகிறது. 🌷🌷🌷
இது எப்போது ஆரம்பித்தது என சொல்ல முடியாது. எல்லா பிறவிகளும் மனிதர்களாகவே பிறந்தாலும் இதில் பெரிதாக கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை. ஆனால் நாம் செய்து கொள்ளும் கர்ம விளைவுகளுககு ஏற்றாற்போன்று நாம் நால்வகையான நரகங்களிலேயே அதிகவாக பிறக்க நேரிடுகின்றது. இப்போது மனிதர்களாக பிறந்த நாம் நாம் சேகரித்துக் கொண்ட தீய கர்மங்களுக்கு ஏற்றாற்போன்று இறந்தவுடனேயே நரகத்தில் பிறக்க நேரிடலாம். புண்ணியவர்களே நரகலோகம் என்பது தமிழ் சினிமா படங்களில் காட்டப்படுவதைப் போன்று கேலித்தனமான இடம் அல்ல. துக்கங்கள் நிறைந்தது. நரகலோகத்தில் பிறந்த பின்னர் நான் அவருக்காகத்தான் இந்த பாவத்தை செய்தேன். என் அம்மாவிற்காக, அப்பாவிற்காக இந்த பாவத்தை செய்தேன் என்று சொல்லியெல்லாம் தப்ப முடியாது. அந்த துன்பத்தை நாம் தனித்தனியே அனுபவிக்க வேண்டும். அப்போது எம்முடன் யாரும் இருக்க மாட்டார்கள். நரகலோகங்களில் ஆயுள் மனித உலகை போன்றல்ல. கோடிக்கணக்கான வருடங்கள் அங்கே துன்பம் அனுபவிக்க வேண்டும். நரகலோகத்தின் உண்மையான இயல்பினை புத்த பகவான் தேவதூத சூத்தரம், பால பண்டித சூத்திரம் போன்ற சூத்திர போதனைகளில் தெளிவாக போதித்திருக்கிறார். 🙏🙏🙏

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

41 − 34 =