துளசி- சகல தோஷங்களையும், துயரங்களையும் விரட்டும்

0
665

!!!* துளசி- சகல தோஷங்களையும், துயரங்களையும் விரட்டும் வல்லமை வாய்ந்தது. புராணங்களும் ஞானநூல்கள் பலவும் இதன் மகிமைகள் குறித்து விவரிக்கின்றன. இந்த உலகில் ஓரிடத்தில் வகை வகையாக மலர்ச் செடிகள் செழித்து வளர்ந்திருந்தாலும் அங்கு துளசிச் செடி இல்லையெனில், அந்த இடத்தை நந்தவனமாக ஏற்க இயலாது.

துளசி படர்ந்த இடத்தை ‘பிருந்தாவனம்’ என்பர். துளசிக்கு ‘பிருந்தா’ என்றும் ஒரு திருப்பெயர் உண்டு. வாழ்நாளின் அந்திமத்தில் துளசி தீர்த்தம் உட்கொள்பவர், மகா விஷ்ணுவுடன் ஐக்கியமாகி விடுவார்கள் என்பது நம்பிக்கை. பூஜைக்காக துளசியைப் பறிக்கும்போது, அதிகாலை வேளையி லும், விரல் நகம் படாமல் விஷ்ணுவின் பெயரை உச்சரித்தவாறும் துளசியைப் பறிப்பதே முறை.

துளசியைப் பறித்து மூன்று நாட்கள் வரை உபயோகப்படுத்தலாம். தனித்தனி இலையாகப் பறிக்காமல் நான்கு இதழ், ஆறு இதழ்களாகப் பறிக்கலாம். முன்னோர் திதிநாள், விரத நாள், தெய்வப் பிரதிஷ்டை தினம், மகாவிஷ்ணுவை வழிபடும் வேளை, தானம் கொடுக்கும் நேரங்களில் துளசியை உபயோகிப்பதால், பன்மடங்கு பலன் கிடைக்கும்.

சங்கு, துளசி, சாளக்கிராமம் மூன்றையும் ஒரே இடத்தில் பூஜை செய்பவர்களுக்கு, முக்காலத்தையும் உணரும் சக்தி ஏற்படும் என்பது சாஸ்திரக் கருத்து.

ஒரு துளசி தளத்தில் 33 கோடி தேவர்களும், பன்னிரு சூரியர்களும், அஷ்ட வசுக்களும், அஸ்வினி தேவர்களும் வசிக்கின்றனர். அதன் நுனிப்பகுதியில் பிரம்மனும், நடுவில் மகாவிஷ்ணுவும், லட்சுமி, சரஸ்வதி, காயத்ரீ, பார்வதி ஆகியோரும் வசிக்கின்றனர். துளசியை வளர்த்து வழிபடுபவதால் ஆயுள் பலம், புகழ், செல்வம், குழந்தைப்பேறு ஆகியன கிட்டும். துளசி காஷ்டம் என்ற மணிமாலையைக் கழுத்தில் அணிபவர்களுக்கு பிரம்மஹத்தி தோஷம் விலகும்; மற்ற பாபங்களும் அகன்று விடும்.

எந்த இடத்தில் துளசிச் செடி உள்ளதோ அங்கே அகால மரணம் ஏற்படாது. துளசியை பூஜை செய்து வந்ததன் பலனாகவே சீதாதேவி ராமபிரானைக் கணவராக அடைந்ததாக துளசி ராமாயணம் கூறுகிறது. சிலர், கருந்துளசியைப் பயன்படுத்தக் கூடாது என்பார்கள். இது தவறு. கருந்துளசிக்குக் ‘கிருஷ்ண துளசி’ என்ற பெயர் உண்டு. இதை, கிருஷ்ணருக்கு மட்டுமல்ல, எல்லா தெய்வங்களுக்குமே பயன்படுத்தலாம். விநாயகர், சக்திதேவி, சிவனுக்குப் போடாமல் தவிர்க்கலாம். பச்சையும், சிறிது வெண்மையும் கலந்ததே வெண் துளசி. இதை ராமபிரானுக்கும் அனுமனுக்கும் சூட்டலாம்.

இவை தவிர, செந்துளசி என்றும் வகையும் அரிதாகக் கிடைக்கிறது. அமாவாசை அன்று யாக்ஞவல்கியரின் மனையாளான காத்தியாயினி சக்தியை துளசியால் வழிபட்டால், பிரிந்த தம்பதியர் மீண்டும் இணையும் பாக்கியம் கிடைக்கும்.

துளசி பூஜை செய்யும் முறை: முறைப்படி துளசியைப் பறித்து, சுத்த நீர் தெளித்து வைத்துக் கொள்ள வேண்டும். திருமகள் அருளைப் பெற வேண்டும் என்று விரும்புவோர், வெள்ளிக்கிழமை காலையிலும், பௌர்ணமி அன்றும் இதைச் செய்யலாம். துளசி மாடம் இல்லாதவர்கள் 12 அல்லது 16 செங்கற்களால் துளசி பீடம் அமைத்து, அதன் முன்பு பெரிய அகலில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும்.

அடுத்து பீடத்தின் நடுவில் துளசிச் செடியை வைத்து, சுற்றிலும் 12 என்ற எண்ணிக்கையில் சந்தன குங்குமப் பொட்டுகள் வைக்கவேண்டும். தொடர்ந்து அவை ஒவ்வொன்றின் மீதும் மலர்கள் வைத்து கேசவா, நாராயணா, மாதவா, கோவிந்தா, விஷ்ணு, மதுசூதனா, த்ரிவிக்ரமா, வாமனா, ஸ்ரீதரா, ஷ்ருஷிகேசா, பத்மநாபா, தாமோதரா என்று சொல்லி, மனதார வணங்கவும்.

அத்துடன், ‘ஸ்வாகதம்’ என்றும் 3 முறை கூறவும். இனி, வெற்றிலையின் மீது சந்தனப் பிள்ளையார் பிடித்து வையுங்கள். அவருக்கு குங்குமத் திலகமிட்டு செம்மலரால் அர்ச்சனை செய்து வணங்க வேண்டும். அடுத்து, தேங்காய் பழம், தாம்பூலம், பால் பாயசம் நிவேதனத்துக்கு வைத்துக்கொண்டு பூஜையைத் துவங்குங்கள். ‘ஓம் ஸ்ரீ விஷ்வக்சேனாய நம:’ – என்று மூன்று முறை சொல்லி விநாயகருக்கு துளசி தீர்த்தம் விடவேண்டும்.

தொடர்ந்து… ‘ஓம் கஜானனாய நம:’ என்று துவங்கி விநாயகர் திருநாமங்கள் சொல்லி துதித்து, பழம் நிவேதித்து ஆரத்தி செய்யவும். அடுத்ததாக, அன்றைய நாள் குறிப்புடன் சங்கல்பம் செய்துகொள்ள வேண்டும்.

பின்னர், கணவன்- மனைவி இருவருமே துளசி பீடத்துக்கு (துளசி மாடம் இருந்தால் அதன் முன்பு) முன்பாக அமர்ந்து, கீழ்க்காணும் நாமாவளிகளைக் கூறி குங்குமத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

ஓம் ஸ்ரீம் பிருந்தா தேவ்யை நம:

ஓம் விஸ்வ பூஜிதாயை நம:

ஓம் விஷ்ணுப்ரியாயை நம:

ஓம் தேவ மூலிகாயை நம:

ஓம் கிருஷ்ண ப்ரியாயை நம:

ஓம் கிருஷ்ண லீலா விநோதின்யை நம

: ஓம் ஸௌபாக்ய நிலயாயை நம:

ஓம் விஷ்ணு கேசின்யை நம:

ஓம் புஷ்பசாராயை நம:

ஓம் நந்தவன நாயகாயை நம:

ஓம் விஸ்வ பாவணாயை நம:

ஓம் யாக பூஜிதாயை நம:

ஓம் தான ப்ரதாயின்யை நம:

ஓம் மகாலக்ஷ்மி வாசாயை நம:

ஓம் சகல மாட கலாலங்கார்யை நம:

ஓம் ஸ்ரீராமப்ரியாயை நம:

ஸ்ரீ துளசீ தேவ்யை நமோ நம:

அர்ச்சனை முடிந்ததும் தூப தீப நிவேதனம் செய்து, கையில் மலர் எடுத்து, மூன்றுமுறை தன்னையே சுற்றிக்கொண்டு கீழ்க்காணும் துதியை மூன்று முறை சொல்லுங்கள். ஓம் ப்ருந்தா ப்ருந்தாவனீ விஸ்வ பூஜிதா விஸ்வபாவனீ புஷ்பஸாரா நந்தனீச துளசீ க்ருஷ்ண ஜீவனீ ஏகாந்தாமாஷ்டகம் சைவ ஸ்தோத்ரம் நாமார்த்த ஸம்யுதம் ய:படேத் தாம்ஸ ஸம்பூஜ்ய அஸ்வ மேத பலம் லபேத்! இப்போது மலர்களை அர்ப்பணித்துவிட்டு, மீண்டும் கைகளில் மலர் எடுத்துக்கொண்டு, மனதில் உங்களுடைய வேண்டுதல்களை நினைத்தபடி ஒரு நிமிடம் தியானித்து, ப்ரசீத துளசி தேவி ப்ரசீத ஹரிவல்லபே க்ஷீரோத மதநோத்பூதே துளசி த்வாம் நமாம்யஹம் என்றபடி துளசிச்செடியின் மேல் மலர்களை போட்டு ஆரத்தி செய்ய வேண்டும்.

ஓம் ஸ்ரீத்ரிபுராயை வித்மஹே துளசி பத்ராய தீமஹி தந்நோ துளசீ ப்ரசோதயாத் யந்மூலே சர்வதீர்த்தாநீ யந்மத்யே சர்வதேவதா யதக்ரே சர்வ வேதாஸ்ச துளசீம் தாம் நமாம்யஹம் கற்பூர நீராஜனம் சமர்ப்பயாமி என்று சொல்லி நமஸ்கரித்து, பிரசாதம் எடுத்துக்கொள்ளலாம்.

பெண்கள் அர்ச்சனை குங்குமத்தை திருமாங்கல்யத்திலும், நெற்றி வகிட்டிலும் இட்டுக்கொள்ளலாம். மேலும், குடும்பத்தோடு சேர்ந்து துளசி ஆராதனை துதிப் பாடலைப் பாடி வழிபடுவதால், மேலான பலன்கள் கைகூடும். சர்வ மங்கலங்களும் ஸித்திக்கும். தினமும் காலையில் துளசி 5 இலைகளை மென்று விழுங்கி வந்தால், பல காரணங்களால் ரத்தத்தில் அதிகமாக இருக்கும் ESR count 20mm வரை குறைந்திடும்.

பிறகு சரியான அளவில் அதை வைக்க உதவும். பிருந்தாவன துளசி பூஜை **************************** பிருந்தா, பிருந்தாவனீ, விஸ்வபூஜிதா, விஸ்வபாவனி, புஷ்பஸாரா, நந்தினீ, துளசீ, கிருஷ்ண ஜீவனி, ஏதந் நாமாஷ்டகம் சைவ ஸ்தோத்ரம் நாமார்த்த ஸம்யுதம் ய: படேத் தாஞ்ச ஸம்பூஜ்ய ஸோஸ்வமேத பலம் லபேத்.. #மஹா விஷ்ணு புகழ்ந்து #போற்றிய இந்த துதியின் #எட்டு நாமங்களும் #காரண பெயர்கள் ஆகையால் #இதை மனனம் செய்வோர் #அசுவமேத யாகம் செய்த #பலனை அடைவார்கள். துளசி ஒரிடத்தில் மிக நெருங்கி அடர்ந்து இருப்பதால் அவளை #பிருந்தை என்று #போற்றுகிறோம்..! #பிருந்தாவனம் தோறும் #இருந்து பிருந்தாவனீ என்ற பெயர் பெற்றாள். அகில ப்ரபஞ்சத்தினால் பூஜிக்கப்பட்டு விஸ்வபூஜிதை என்ற பெயர் பெற்றாள். எண்ணற்ற ப்ரபஞ்சமெல்லாம் பரிசுத்தமாக்கி விஸ்வபாவனீ என்ற பெயர் பெற்றாள். மலர்களின் மீது ப்ரீதி உள்ள தேவர்களும் அவைகளால் ஆன்ந்தமடையாமல் துளசியாலேயே ஆனந்த மடைந்ததால் புஷ்ப ஸாரா என்ற பெயர் பெற்றாள். அடைந்ததுமே ஆனந்தத்தை அளிக்கும் தன்மையினால் நந்தினீ என்ற பெயர். பெற்ற துளசி.

க்ருஷ்ணனால் உருக்கொன்டு வாழ்வதால் க்ருஷ்ண ஜீவனி என்ற பெயர். பெற்றவள். #துளசியின்_தோத்திரம் #புனிதம்_மிக்கது. மஹா விஷ்ணுவின் மனைவி பகவானின் அம்சம் நிறைந்த துளசி செடி. பிருந்தையாகிய துளசி மஹா விஷ்ணுவை மணந்து கொன்ட நாள் . ஐப்பசி மாத சுக்ல பக்ஷ த்வாதசி திதி. ப்ருந்தாவன த்வாதசி என்று போற்றப்படுகிறது..!. துளசி செடியை ஒரு மேடையில் அல்லது பூந்தொட்டியில் வைத்து ப்ருந்தாவனம் என்று வணங்குவோம்..! துளசி செடியில் துளசி தேவியையும் பக்கத்தில் ஒரு நெல்லிக்காய் அல்லது நெல்லி மர குச்சியையோ வைத்து அதில் மஹா விஷ்ணுவை ஆவாஹனம் செய்து துளசி அமைந்துள்ள இடத்திற்கு ( பிருந்தாவனத்திற்கு) அருகில் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி உட்கார்ந்து பூஜை செய்வது விஷேசம்..!

பக்தியுடன் துளஸியை பூஜை செய்வதால் மன மகிழ்ச்சி, ஒற்றுமை, ,குடும்பத்தில் அமைதி, லக்ஷிமி கடக்ஷம், வம்சம் தழைக்கும்.உடல் வலிமை, மனோ தைர்யம் உண்டாகும்.நீண்ட ஆயுள் ஆரோக்கியம் கிட்டும்., #பூஜை செய்யும் துளசி செடியிலிருந்து துளசி #பறிக்க_கூடாது. #வேறு துளசி செடியிலிருந்து தான் துளசி #பறிக்கவேண்டும்.. ஸெளமங்கல்யம் தனைஸ்வர்யம் புத்ர பெளத்ராதி ஸம்பதம் புஷ்பாஞ்சலி ப்ரதானேன தேஹி மே பக்தவத்ஸலே. இல்லங்களில் துளசியை வளர்த்துப் பூஜிப்பதால் அந்த இல்லமே செழிப்படையும் என்பது ஐதீகம். துளசியின் மஞ்சரியை ஸ்ரீகிருஷ்ணருக்குச் சமர்ப்பிப்பவர் எல்லா விதப் பூக்களையும் சமர்ப்பித்த பலனை அடைவார்கள் துளசி இலை, ஹரியின் பூஜையில் சேர்க்கப்படாவிட்டால் அந்தப் பூஜையின் பலன் கிடைப்பதில்லை.

நிவேதனத்தின் போது துளசியின் ஸ்பரிசம் இருந்தால் மட்டுமே அந்த நிவேதனத்தை இறைவன் ஏற்கிறார். ஆகவே, துளசி தீர்த்தத்தால் மட்டுமே #நிவேதனம்_செய்யவேண்டும். துளசி இலையின், #நுனியில்_பிரம்மாவும், #மத்தியில்_விஷ்ணுவும் #அடியில்_சிவனும், மற்றைய பகுதிகளில், இரு அசுவினி தேவர்களும், எட்டு வசுக்களும், பதினோரு ருத்ரர்களும் பன்னிரண்டு ஆதித்யர்களும் எழுந்தருளி இருப்பதாக #ஐதீகம். ஸ்ரீ கிருஷ்ணரை துளசியால் அர்ச்சிப்பவர், தம் #முன்னோர்களையும் #பிறவித்தளையில் இருந்து விடுவிக்கிறார்.

துளசி நிறைந்த காட்டுக்குள் பிரவேசிப்பவரது #பிரம்மஹத்தி தோஷம் #நிவர்த்தியாகிறது. எந்த இல்லத்தில் துளசி இருக்கிறாளோ அந்த #இல்லத்தை #துர்சக்திகள்அண்டாது. அதனால் தான் வீட்டு முற்றத்தில் துளசி வளர்க்கும் மரபு உண்டாகியது. இல்லத்தில் வசிப்பவர்களுக்கு யம பயம் கிடையாது. துளசியை வளர்த்து, தரிசித்து, பூஜிப்பதால் மனம், வாக்கு, உடல் ஆகிய மூன்றாலும் செய்த பாவங்கள் தொலையும். துளசியைப் பூஜிப்பது, கங்கா ஸ்நானத்திற்குச் சமமான பலனைக் கொடுக்கும். துளசி மணிமாலை அணிவது உடலை நோய்கள் அண்டாது காக்கும். துளசி மணி மாலையால் செய்யப்படும் ஜபம் பன்மடங்கு பலனைக் கொடுக்கும். மூதாதையரின் திதி காரியங்களில் துளசி பயன்படுத்துவதாலும், துளசிச் செடிகளின் நிழல் படும் இடங்களில் செய்வதாலும் பரிபூரணப் பலன் கிடைக்கிறது. தானங்கள் செய்யும் போது முழுமையான பலன், தானம் செய்யும் பொருளுடன் துளசித் தளம் சேர்த்துக் கொடுப்பதாலேயே கிடைக்கிறது. #சங்கு, #துளசி, #சாளக்கிராமம் மூன்றையும் ஒன்றாக வைத்துப் பூஜிப்பவர்களுக்கு முக்காலமும் உணரும் மகா ஞானியாகும் பாக்கியம் கிடைக்கும். கார்த்திகை மாதம், சுக்ல பட்ச துவாதசி திதியை `பிருந்தாவன துவாதசி’ என கர்நாடக, மராட்டிய மாநிலங்களில் கொண்டாடுகிறார்கள். அன்றுதான் ஸ்ரீ கிருஷ்ணருக்கும், துளசிக்கும் திருமணம் நடந்ததாக ஐதீகம். நெல்லி மரம் விஷ்ணுவின் அம்சமாகப் போற்றப்படுவதால், துளசி மாடத்தில் நெல்லி மரக் கொம்பையும் நட்டு, வாழை மர, தோரணங்களுடன், மாக்கோலமிட்டு அலங்கரித்து பூஜை செய்வார்கள்.

நிறைய தீபங்கள் ஏற்றி, பெண்களுக்கு தாம்பூலம், இனிப்பு அளிப்பது வழக்கம். எல்லா நலன்களும் தரும் ஸ்ரீ துளசியைப் பூஜித்து, துளசியை தினமும் மூன்று வேளை வலம் வர வேண்டும். வலம் வரும் போது “பிரசீத துளசி தேவி பிரசீத ஹரி வல்லயே க்ஷீ ரோதமத நோத்புதே துளசி த்வாம் நமாம்யகம்” என்ற மந்திரம் சொல்ல வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

62 − 57 =