தவசம், தர்பணம் என்றால் என்ன?

0
350

முதலில் தர்ப்பணம் என்றால் என்ன என்று பார்ப்போம்.தர்ப்பணம் என்பது சூரியன், சந்திரன் போன்ற அனைத்து தேவர்களுக்கும் நாம் நன்றி சொல்லி அவர்களுக்கு உணவு அளித்து அவர்களுது ஆசிர்வாதம் பெறுவது.

நதி ஓரம் அமாவாசை அன்று காலையில் அந்தணர்கள் வைத்து நாம் நமது முன்னோர்கள் பெயர், திதி போன்றவை கூறி பூஜை செய்து இரு கைகளால் அவர்கள் தரும் அரிசியை நதியில் கரைத்து தேவர்களை வணங்கலாம்.

இப்படி செய்வது நமக்கு அவர்களின் ஆசிர்வாதம் நேரடியாக பெறமுடியும்.

இப்போது தவசம் என்றால் என்ன என்று பார்ப்போம்.

நம் முன்னோர்கள் இறந்த நாளில் திதி அறிந்து வருத்தத்தில் ஒரு நாள் நாம் அந்தணர்கள் வரவழைத்து வீட்டிலே தவசம் செய்யவேண்டும். அப்படி செய்யத்தால் நம் முன்னோர்கள் நமக்கு ஆசி வழங்குவார்கள்.

அமாவாசை மற்றும் அவர்கள் இறந்த திதியில் பூமியை நோக்கி வருவார்கள் என்று அர்த்தம். ஆகையால் அவர்கள் பசியோடு வருவதை நாம் தவசம் செய்து அவர்களுக்கு படையல் படைக்க வேண்டும்.

இப்படி செய்தால் பிதுரு தோஷம் நமக்கு மற்றும் நம் சந்ததிகளுக்கு வராது.

ஆகையால் நம் முன்னோர்கள் ஆசிர்வாதம் பெற்று வளமோடு வாழுவோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

44 − 36 =