எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க? இதை படியுங்கள்

0
328

நம் உடலில் உள்ள எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சக்கரம் என்றால் அது விசுத்தி சக்கரம்.

அச்சக்ரம் நமது கழுத்து பகுதியில் அமைந்துள்ளது. நமது இரு கைகளை வேகமாக தேய்த்தால் ஒரு வகையான சூடு வரும். அப்போது கழுத்தில் முன் பக்கத்தில் ஒரு கையையும், பின் பக்கத்தில் ஒரு கையையும் வைத்து கண்ணை மூடிக்கொண்டு மனதை ஒரு நிலை படுத்தவும்.

இப்படி ஒரு நிமிடம் செய்தால் உங்கள் கையில் உள்ள காந்தசக்தி தொண்டை குழியை சீராக செய்து விடும்.

இரண்டாவது சற்று அமர்ந்து கைகளால் கழுத்து பின் பகுதியை மேலே உயர்த்தி வாயால் மூச்சினை விட வேண்டும். இதன் மூலம் தொண்டை குழி மூச்சு குழாய் சீராகி விடும்.

நமக்கு உடல் நலம் குறையும் போது முதலில் தொண்டை குழாய் ஒரு விதமான பாதிப்புகள் ஏற்படும், அதன் மூலம் நாம் தெரிந்து கொள்ளுங்கள்.

இன்றைய சூழ்நிலையில் எதை செய்தால் நம்மை நாமே காத்துக் கொள்ள முடியும் என்று தான் பலபேர் சிந்தித்துக் கொண்டு இருக்கிறார்கள். எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் வருமுன் காப்பது தானே நல்லது.

கண்ணுக்குத் தெரியாத கிருமிகளின் மூலம் மனிதருக்கு நோய்த்தொற்று ஏற்படுவது இயற்கை தான். ஆனால் அதன்மூலம் விரைவில் பாதிப்பு அதிகரிக்கும் என்ற சூழ்நிலை வந்தால்! அதுதான் தற்சமயம் உலகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது.

கண்ணுக்குத் தெரியாத எந்த கிருமியும் நம்மை தாக்காமல் இருக்க வேண்டுமென்றால் நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் தேவைப்படுகிறது.

சில பேருக்கு அதிகமான பயம், அதிகமான மன அழுத்தம் காரணமாக இரவு நேரங்களில் தூக்கம் கண்களை தழுவாது. மிகவும் சிரமப்படுவார்கள். இதன் மூலம் ஆரோக்கியம் தான் கெடும். இப்படிப்பட்டவர்கள் ஒரு எலுமிச்சம்பழத்தை இரண்டாக வெட்டி, தலைக்கு மேல் பக்கத்தில் 2 பக்கங்களிலும், வைத்துவிட்டு படுத்தால் நல்ல தூக்கம் வரும். எதிர்மறையான எண்ணங்களை தவிர்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

89 + = 97