பிறரை பழித்துப் பேசாதீர்

0
288

உங்களை நீங்கள் எவ்வளவு நேசிக்கிறீர் களோ, அதே அளவிற்கு பிறர் மீதும் நேசம் காட்டுங்கள். அவர்கள் உங்களைவிட எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

எக்காரணம் கொண்டும், பிறரை இழிவாக பேசுதலும், வீண்பழி சுமத்துதலும் கூடாது. இத்தகைய
செயல்களால் வீண் பகை வளருமே தவிர, பெயருக்குக் கூட நன்மை
உண்டாகாது. மேலும் இத்தகைய குணமுடையவர்களிடம் பாசம்,
பரிதாபம், இரக்கம், கருணை என எத்தகைய நற்பண்புகளும்
இருக்காது.

மனிதர்களுக்கு ஏற்படும் துன்பமானது, வெளியில்
எங்கிருந்தோ வருவதில்லை. அவரவர் நடந்து கொள்ளும்
விதத்திற்கேற்ப அவர்களுக்கு திரும்பக்கிடைக்கிறது.

பிறரை பழிப்பதாலும் நமக்கு துன்பம் வரும். ஆகவே, பழிச்சொல்லை
விட்டு, அனைவரிடமும் பரிவுடன் நடந்து கொள்ள வேண்டும். அத்தகையவர்களே இறைவனால் விரும்பப்படுவர்.

சிலர் மற்றவர்களை பற்றி குற்றம் சொல்லுவதையே வழக்கமாக
கொண்டிருப்பர். பிறர் செய்யும் நல்ல செயல்களைக்கூட மாற்றி திரித்து பேசுவர். இப்படி செய்யவே கூடாது. அடுத்தவர்களை குற்றம் சொல்லிக் கொண்டிருப்பவர்களிடம் யாரும் நெருங்க மாட்டார்கள்.

ஒருகட்டத்தில் அவர் தன் சுற்றத்தார் அனைவரையும் இழந்து தனித்து நிற்க வேண்டிய சூழ்நிலைதான்
வரும். இறுதிவரையில் அவருடன் சொந்தம், உறவு என யாரும்
இல்லாமலேயே போய்விடுவர்.

ஆகவே, ஒருவர் எத்தகைய செயல்
செய்தாலும், அதை விமர்சனம் செய்து பேசாதீர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 + 6 =