பலன் கூறும் முறைகள்

0
458


சூரியனின் சலனத்தைக் கொண்டு மற்ற கிரகங்களின் இருப்பை, நிலையை கணிக்கும் முறை சயன முறையாகும். இது தற்காலத்தில் உள்ள கிரக நிலையைக் குறிக்கும் இம்முறை ஆங்கிலேயர்களால் பின்பற்றப்படுகிறது.

சூரிய சித்தாந்தப்படி, இந்த அண்டம் முழுவதும் ஆண்டுதோறும் சிறிதுசிறிதாக நகர்ந்து வருகிறது. ஒரு குறித்த தினத்தில் ஒரு குறித்த இடத்தைத் காணும் போது இருந்த நிலையான தன்மைக்கு பலன்கள் எழுதப்பட்டன. இது இந்திய முறையாகும். இதை நிர்ணய முறை என்று கூறுவார்கள்

இது சந்திரனின் சலனத்தைக் கொண்டு சுவைப்பது அண்டம் முழுவதும் நகர்வதால் காலக் கணிப்பில் சிறிது பேதம் ஏற்படுகிறது. எனவே இந்த வித்தியாசத்தை கழித்து கிரக நிலையை அறிந்து பலன் கூறவேண்டும், இந்த காலக் கணிப்புப் பேதமே அயனாம்சம் எனப்படும். இந்திய பஞ்சாங்கங்கள் நிரயண கிரக நிலைகளையும், அயனாம்சத்தை யும் தெரிவிக்கின்றன. மேலைநாட்டு எபிமெரிஸ்’ – என்னும் பஞ்சாங்கங்கள் சயன நிலையைத் தருவன. எனவே, இவற்றை பயன்படுத்துவோர் அயனாம்சத்தையும் கழித்து கிரக நிலையை அறிய வேண்டும்

ஜோதிடக் கணிப்பு முறையில், பஞ்சாங்கம் எழுதும் முறையில், இந்திய முறைகளில், வாக்கியம், திருக்கணிதம் என இருவகை உள்ளன. வாக்கிய கணிதம் என்னும் முறை ஏற்பட்ட பின்னர், விஞ்ஞானத்தில் நிரூபிக்கப்பட்ட சில சிறிய மாறுதல்கள், அதாவது சூரியனின் சூழற்சிப் பாதை M சூரிய-சந்திரர்களின் இயக்கம், ஆகர்ஷண சக்தி ஆகியவை ஏற்கப்பட்டு, சிறிய மாறுதல்களுடன் கணிக்கப்படுவது திருக்கணிதம் ஆகும். திருக்கணிதப்படி கணிப்பது சரியானது என்பது பல பெரியோர்களுடைய அனுபவமும் கருத்தும் ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

27 + = 29