பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் இந்த பொருட்களை கேட்டால் கொடுக்காதீர்கள்

0
74
Close up sugar cubes and cane in wooden spoon on the table

வீட்டின் அருகே உள்ள வீடுகளில் நாம் எந்த பொருட்களை வாங்கலாம் அவர்கள் நம் வீட்டில் எந்த பொருட்களை வாங்க கூடாது என்பதை இக்கட்டுரையில் பார்ப்போம்.


பொதுவாகவே தேவைகள் என்பது அனைவரிடமும் உள்ளது நாம் இந்த பொருட்களை வைத்து இருந்தால் நன்றாக இருக்கும், இந்தப் பொருட்கள் இப்போது நம் வீட்டில் இருந்தால் நன்றாக இருக்கும், இந்தப் பொருள் நம் வீட்டிற்கு தேவையானது என்று அச்சமயத்தில் தான் இந்த தேவைகள் நமக்கு உணர்த்துகின்றது.


அப்படி தேவைப்படும்போது அக்கம்பக்கம் வீட்டில் நான் தேவைகளுக்கு உண்டான பொருள்களை தேடி சென்று வாங்குகின்றோம் அதே போல் அவர்களும் தேவைக்கேற்ப பொருள்களை நம்மிடமிருந்து வாங்குகிறார்கள்.


இத் தேவைகளை நாம் சரியான நேரத்தில் வாங்கினால் நமக்கு எந்த ஒரு பாதிப்பும் வராது ஆனால் சில நேரங்களில் இந்த தேவைக்கேற்ப பொருட்களை கொடுத்தாலோ அல்லது நாம் மற்றவர்களிடம் இருந்து வாங்கினாலோ அந்த தேவையான பொருள்கள் நமக்கு பாதிப்பை உண்டாக்கும்.

எடுத்துக்காட்டாக நம் முன்னோர்கள் அக்காலத்தில் மாலை நேரத்தில் விளக்கு ஏற்றிய பின்பு எந்த ஒரு பொருட்களும் நம் வீட்டில் இருந்து மற்றவர்களுக்கு தானமாகவும் இல்லை தேவைக்கேற்ப பொருட்களோ கொடுப்பதில்லை.

காரணம் என்னவென்றால் விளக்கேற்றிய பின்பு மகாலட்சுமி நம் வீட்டிற்கு குடியேறும் நேரமாகும் அச்சமயத்தில் நமது பொருள்களை மற்றவர்களிடம் கொடுத்தால் மகாலட்சுமிக்கு நாம் செய்யும் ஒரு வகையான தேவையற்ற செயலாகும்.

அப்படி என்னென்ன தேவையான பொருட்கள் நாம் மற்றவர்களிடம் அந்நேரத்தில் கொடுக்க கூடாது என்பதை கூறுகிறேன்.வெள்ளை நிற பொருட்களான பால், தயிர், சர்க்கரை, சுண்ணாம்பு மற்றும் தண்ணீர் இது போன்ற பொருட்களை மாலை விளக்கு ஏற்றிய பின்பு நாம் மற்றவர்களுக்கு கொடுக்க கூடாது.

தவிச்ச வாய்க்கு தண்ணி கொடுப்பது தவறா? என்று நீங்கள் கேட்கலாம் ஆம் தேவையான இடங்களில் மட்டும் தேவையான நேரத்தில் மட்டும் தண்ணீர் கொடுப்பது உகந்தது.ஆனால் தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்காமல் இருந்தால் பாவம் ஆனால் தண்ணியை தவிர்த்து பாக்கி பொருட்களை கொடுப்பது தேவையான விஷயமாகும்.

இவ்வாறு அக்கம்பக்கம் வீட்டில் நாம் வசிக்கின்ற பொழுது அவர்கள் இதை தெரிந்து வந்து கேட்பார்கள் இவ்வாறு அவர்கள் தெரிந்தே கேட்பதன் மூலம் நம்மளோட செல்வத்தை இழப்பதற்கு இடம் ஆகும்.

ஆகையால் அவர்கள் தெரிந்தே கேட்டாலும் நாம் நம் பொருட்களை தரமாட்டோம் என்று கூறிவிடுங்கள்.

இது போன்ற விஷயங்கள் நகர வாழ்க்கையில் சாத்தியம் இல்லை ஏனென்றால் இதுபோன்ற மூடநம்பிக்கைகள் போய்விட்டது என்று நம்புகிறார்கள் ஆனால் முன்னோர்கள் அக்காலத்தில் இது போன்ற செயல்கள் நடத்தினால்தான் செல்வமிக்க ராஜாக்களாக வாழ்ந்துள்ளனர்.

ஆகையால் நம்பிக்கையுடன் இருக்கும் நமது வாழ்க்கை முறையை முன்னோர்கள் கூறியபடி வாழ்ந்து பாருங்கள் நம்பிக்கை இல்லாதவர்கள் இது போன்ற விஷயங்களை தவிர்த்து விடலாம்.

ஆனால் நம்பிக்கையுடன் வாழ்ந்தால் வெற்றி நிச்சயம் நமது செல்வப் பெருக்கையும் நாமே பாதுகாக்க வேண்டும் என்பதை இக்கட்டுரையின் மூலம் பதிவு செய்கின்றோம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 + 2 =