நாட்டுப் பசும்பால் (A2 Milk) பயன்கள்

0
135

நாட்டுப் பசும்பால் (A2 Milk)

நாட்டு பசுக்களின் பால் A2 வகை பால். கலப்பின பசுக்களின் பால் A1 வகை பால்.

நாட்டு பசுக்களின் பாலில் உடல் வலிமை தரும் வகையிலான புரதம் உள்ளது. கலப்பின பசுக்களின் பாலில் நோய்களை உண்டாக்கும் புரதம் உள்ளது.நாட்டு பசும்பாலில் உள்ள பீட்டா கெசின் (Beta Casein) என்னும் புரதம் உடலை வலிமை அடைய செய்கிறது.

கலப்பின பசும்பாலில் உள்ள பீட்டா கெச் (Beta Casein) என்னும் புரதம் பீட்டா கேசோ மார்பின் (Beta Caso Morphine 7 – BCM7) என்று சொல்லப்படுகின்ற நமது உடலுக்கு ஒவ்வாத புரதப்பொருட்களை உணவுப் பாதையில் (Digestive) உண்டாக்குகின்றது.

1. கலப்பின பசும்பாலில் இருந்து உண்டாகின்ற (BCM7) கீழ்வரும் நோய்களுக்கு காரணமாகக் கண்டறியப்படுகிறது.

2. இளவயது சர்க்கரை நோய் (Type 1 Diabetes – Insulin Dependant Diabetes Mellitus, IDDM) இருதய ரத்தக்குழாய் அடைப்பு நோய் (Coronary Heart Disease).

3. ஆட்டிசம் (Autism) இளவயது குழந்தைகளை பாதிக்கும் நோய்.

4. சீசோ பிரியா (Schizophrenia) நடுத்தர வயதினரை பாதிக்கும்.

5. மல்டிபிள் ஸ்கிளியோரசிஸ் (Multiple Sclerosis)

6. கிரான்ஸ் டிசீஸ் (Chrons Disease) இன்னும் பல நோய்கள்

7. பிறந்து இரண்டு வயது வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் தான் சிறந்த உணவு, கலப்பின பசும்பாலை இரண்டு வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கண்டிப்பாக கொடுக்க கூடாது.

8. பெரியவர்கள் சர்க்கரை நோய் உள்ளவர்கள் இருதய நோய் உள்ளவர்கள் கலப்பின பசும்பாலை தவிர்ப்பது

9. நல்லது நாட்டு பசுக்கள் – திமில் உள்ள பசுக்களை வளர்த்து அதன் பாலை உணவாகவும், தயிர், மோர், நெய் என எல்லாவிதமாகவும் உண்ணலாம். நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்.)

10. நாட்டு பசுவின் சாணம் – லட்சுமியின் இருப்பிடம், பஞ்ச கவ்யம், ஜீவாமிர்தம் போன்ற கரைசல்களை உபயோகிக்க மண் வளம் பெருகும். இயற்கை விவசாயம் செழிக்கும்.

11. நம் மண்ணின் பசுக்களையும் காளைகளையும் கோ பூலை, அல்லிக்கட்டு, ரேக்ளா போன்ற நமது பாரம்பரியத்தை காக்க வளர்த்திடுவோம்.

12. ஒரு விவசாயி – ஒரு நாட்டு பசு என்று நமது பயணத்தை துவங்கினால் எல்லா விவசாயிகளும் நலமுடனும், வளமுடனும் வாழ்வோம் என்பதில் ஐயமில்லை .

மண் வளம் காப்போம் – விவசாயம் காப்போம்
விவசாயம் காப்போம் பாரத தேசம் காப்போம் –

– பாரத தேசம் காப்போம் உலகம் காப்போம்

வாழ்க வளமுடன்.நாட்டு மாடுகளின் வகைகள்:

அத்தக்கருப்பன்
அழுக்குமறையன்
அணறிகாலன்
ஆளைவெறிச்சான்
போருக்காளை
மஞ்சள் வாலன்
மறைச்சிவலை
ஆனைச்சொறியன்
மேகவண்ணன
முறிகொம்பன்
கட்டைக்காளை
முரிகாளை
கருமறையான்
சங்கு வண்ணன்
கட்டைக்காரி
கட்டுக்கொம்பன்
செம்மறைக்காளை
செவலை எருது
கட்டைவால் கூளை
செந்தாழைவயிரன்
கருமறைக்காளை
கண்ண ன் மயிலை
சொறியன்
தல்லயன்காளை
கள்ளக்காடன்
கள்ளக்காளை
கத்திக்கொம்பன்
தறிகொம்பன்
வட்டச்செவியன்
வளைக்கொம்பன்
கருங்குவழை
கட்டைக்கொம்பன்
வள்ளிக்கொம்பன்
வர்ணக்காளை
கழற்காய் வெறியன்
வட்டக்கரியன்
கழற்சிக்கண்ணன்
வெள்ளை காளை
கருப்பன்
காரிக்காளை
காற்சிலம்பன்
குண்டு கண்ணன்
கூடு கொம்பன்
கூழை சிவலை
வெள்ளைக் குடும்பன்
மயிலைக்காளை
கருக்காமயிலை
பணங்காரி
சந்தனப்பிள்ளை
செம்பூத்துக்காரி
கொட்டைப்பாக்கு
காரிமாடு
ஏறுவாயன்
புலிகுளம் காளை
நெட்டைக்கொம்பன்
குத்துக்குளம்பன்
பட்டிக்காளை
பொட்டைக்கண்ணன்
குட்டைநரம்பன்
காராம்பசு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 1 = 3