நல்ல பாம்பு கனவில் வந்தால்?

0
379

நாம் உறங்கும் பொழுது கனவில் பாம்பு நம்மை கடிப்பது போன்றும், நம்மை துரத்துவது போன்றும், நம்மைச் சுற்றி இருப்பது போன்றும் நாம் கனவு கண்டிருப்போம். இதற்குண்டான பலன்கள் என்னவென்று ஆன்மீக ரீதியாக இப்பதிவில் காண்போம்.

பாம்பு கனவில் வருவதினால் நமக்கு உண்டாகும் நன்மை தீமைகளை பற்றி உங்களுக்கு தெரியாத விஷயங்கள். வலது பக்க தோளில் பாம்பு கடிப்பது போல கனவு கண்டால் பல வகைகளில் செல்வம் வந்து நம்மைச் சேரும். இரண்டு பாம்புகள் ஒன்றாக இணைவதை போல கனவு கண்டால் செல்வம் மிகுதியாக வந்து குவியும். இரட்டைப் பாம்புகளை கண்டால் நமக்கு பல்வேறு நன்மைகள் உண்டாகும். பச்சைப்பாம்பு செடி கொடிகளில் இருப்பதுபோல் கனவு காண்பதால் குடும்பத்தில் சந்தோஷம் இருக்காது, கண் சம்பந்தப்பட்ட நோய்கள் நமக்கு வரலாம். மலைப்பாம்பு உங்கள் உடலை சுற்றி முழுகுவது போல கனவில் வந்தால் வரவிருந்த பெரிய ஆபத்து விலகி விட்டது என பொருள்.

 

பாம்பு கடித்து விட்டதாக கனவு கண்டால் தனலாபம் உண்டாகும். நாம் பாம்பை அடித்துக் கொள்வதாக கனவு கண்டால் விரோதிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். பாம்பு கடித்து ரத்தம் வருவது போல கனவில் வந்தால் பிடித்த சனி நீங்கிவிட்டது என்று அர்த்தம். நல்ல பாம்பு கனவில் வந்தால் விரோதிகளால் தொல்லைகள் நம்மை வந்து சேரும். கழுத்தில் பாம்பு விழுவது போல கனவு கண்டால் பணம் விரயம் ஆகும். காலைச்சுற்றி பாம்பு பின்னி கொள்வது போல் கனவு கண்டால் நமக்கு சனி பிடிக்கப் போகிறது என்று பொருள். பாம்பு நம்மை விரட்டுவது போல கனவு கண்டால் வறுமை உண்டாகும்.

மலைப்பாம்பு கனவில் வந்தால் தொல்லைகள் பிணிகள் நம்மைப் பிடித்திருக்கும் தரித்திரங்கள் எல்லாம் நீங்கும். நல்ல பாம்பு இறந்து கிடப்பதாக கனவில் வந்தால் துக்கச் செய்தி நம்மை நாடிவரும். நல்ல பாம்பு உங்களைக் கண்டு பயந்து ஓடுவதைப் போல கனவு காண்பதால் தங்களுக்கு வரவிருந்த ஆபத்து விலகி விட்டதாக அர்த்தம். நல்ல பாம்பு உங்கள் முன் படமெடுத்து ஆடுவது போல கனவு வந்தால் வாழ்க்கையில் புதிய மாற்றங்கள் உண்டாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

39 + = 46