தூங்கும் போது உடலில் என்ன நடக்கும்?

0
142

காலையில் எழுந்தது முதல் இரவு படுக்கும் வரை ஓயாது வேலை செய்யும் மனிதர்கள் இரவில் படுத்துறங்கும்போது அசந்து தூங்குவதை காணலாம். மனிதனின் உடலுக்கு அவசியம் ஓய்வு தேவைப்படுவதைப்போல், உடல் உறுப்புகளுக்கும் ஓய்வு தேவைப்படுகிறது. அதை அடுத்து, நாம் உறங்கும் போது நமது உடலில் என்னென்ன இயக்கம் நடைபெறுகிறது என்பதை பார்க்கலாம்.

நாம் தூங்கும் போது உடலில் ஹார்மோன்கள் நன்கு சுரக்கும்.

மெலடோனின் என்ற ஹார்மோன் பினியல் சுரப்பியில் சுரக்கும். அது நமக்கு நல்ல தூக்கத்தை ஏற்படுத்தும்.

மூளையில் இருக்கும் திரவம் அதிகம் அங்கு ஏற்படும் நச்சு பொருட்களை சுத்தம் செய்யும் வேலை நடக்கும்.

உடல் வளர்ச்சிக்குத் தேவைப்படும் ஹார்மோன்களை பிட்யூட்டரி சுரப்பி சுரக்கும். ஆழ்ந்த தூக்கத்தின்போது நம் தசைகள் தற்காலிகமாக செயல் இழந்து ஓய்வு எடுக்கும்.

இரத்த சுத்திகரிப்பு, உடலில் ஏற்படும் நச்சுப்பொருட்களை சுத்தம் செய்வது போன்ற பல செயல்கள் நடக்கிறது.

உடலில் உள்ள வீக்கம், காயங்கள் போன்றவற்றை குணமாக்கும் சைட்டோகின்ஸ் என்ற புரதச்சத்தும் இரவில் தான் உற்பத்தியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இரவில் சிறுநீர் கழிக்க ஏற்படும் உணர்வை மூளை முடக்கிவைத்து அதிக நேரம் நாம் தடையில்லாமல் தூங்க உதவுகிறது.

இதுபோன்ற செயல்களினால்தான் நாம் நன்கு தூங்கி எழுந்து மறு நாளை புது உற்சாகத்துடன் தொடங்க முடிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 68 = 71