தூக்கம் வருவதற்கு தூக்க மாத்திரை சாப்பிட்டால் என்ன பாதிப்பு தெரியுமா?

0
119

இன்சோம்னியா என்ற தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு தூக்க மாத்திரை மருத்துவர்கள் பரிந்துரை செய்வதுண்டு. தூக்க மாத்திரை மூளையில் மெலடோனின் சுரப்பை அதிகரிக்கச்செய்வதோடு, நிறைய பக்க விளைவுகளையும் கொடுக்கும். அதில் முக்கியமாக தலை சுற்றல், அடிக்கடி தலைவலி, குழப்பங்கள், எரிச்சல், மன அழுத்தம் ஆகியவை ஏற்படும். மிக நீண்ட 6T காலமாக தூக்க மாத்திரைகளை எடுத்துக் கொண்டால், அதுவே பழக்கமாகிவிடும்.

பின்னர் மாத்திரை இல்லாமல் உங்கள் தூக்கம் இல்லை என்ற நிலை உருவாக கூடும். இது வயதானவர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். ஏனெனில், இந்த மருந்து உடலில் கரைய அதிக நேரம் எடுத்துக் கொள்வதால் காலையில் எழும்போது மிகவும் சிரமமாக இருக்கும்.

அதையடுத்து, தூக்க மாத்திரைகள் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள்.

தூக்கத்தில் மூச்சுத்திணறல் பாதிக்கப்படுபவர்களுக்கு, தூக்க மாத்திரைகள் சிக்கலை மேலும் அதிகரிக்கும்.

தூக்க மாத்திரை சாப்பிடுவதால் தலைவலி மற்றும் முதுகு வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

தூக்க மாத்திரைகள் சாப்பிடவுடன் வாந்தி, குமட்டல், வேர்வை போன்ற அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக அதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

தூக்க மாத்திரைகளை நீண்ட காலத்திற்கு எடுத்துக் கொள்வதன் மூலம் புற்றுநோய் உண்டாகும் அபாயம் ஏற்படும்.

ஒரே நேரத்தில் அதிக அளவிலான தூக்க மாத்திரைகளை எடுத்துக்கொள்வது கோமா அல்லது மரணத்தை கூட ஏற்படுத்தும் அபாயம் உண்டு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 3 = 1