ஜோதிடம் கற்போம் -பகுதி 1

0
468

பாரத தேசத்தின் வடமொழி இலக்கிய வரலாறு காணும் போது தலையாய இடத்தில் இருப்பவை இருக்கு வேதம், யசுர் வேதம், சாம வேதம் மற்றும் அதர்வண வேதமாகும். இந்த வேதங்களுக்கு உறுப்புகளாக சிக்ஷா வியாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜ்யோதிஷம் மற்றும் கல்பம் ஆகிய ஆறும் கூறப்பட்டுள்ளது. இவற்றுள் ஜோதிட சாஸ்திரம் வேதத்தின் கண்களாகப் போற்றப்படுகின்றது

ஜ்யோதிஷம்’ என்னும் வடமொழிச் சொல்லுக்கு ஒளியைப் பற்றிய அல்லது ஒளியினுடைய சாஸ்திரம் என்று பொருள், ‘ஜ்யோதிஷம்’ என்பது அறிவைத் தரும் ஒளி எனப் பொருள்படும். வேதமாகிய மனிதனுக்கு முக்கிய உறுப்பான கண்ணாக இந்த ஜோதிட சாஸ்திரம் விளங்குகின்றது. புருஷ சூக்தத்தில் இறைவனின் கண்களினின்று தோன்றியவன் சூரியன் என்று கூறப்பட்டுள்ளது. கண்ணின் ஒளி சிறந்து விளங்க சூரிய நமஸ்காரம் செய்யச் சொல்லப்பட்டுள்ளது ஒவ்வொரு நாளும். சூரிய உதயம் முதற்கொண்டே கணக்கிடப் படுகிறது பசுவும் -இரவும் சூரியன் உதயத்தையும்

மறைதலையும் கொண்டே கணக்கிடப்படுகிறது. சூரியன் எந்த ராசியில் காணப்படுகிறானோ அதுவே அம்மாதமாகும். மேஷ ராசியில் துவங்கி மீன ராசி வரை சென்று திரும்பவும், மேஷ ராசியில் சூரியன் வரும் காலம் ஓர் ஆண்டாக கணக்கிடப் படுகிறது. எனவே, ஒளியைத் தரும் சூரியனைக் கொண்டே காலங்கள் கணக்கிடப்படுகிறது. வானத்தில் சூரியனைச் சுற்றி மற்றைய கிரகங்கள், நட்சத்திரங்கள் வான்மண்டலத் தொகுதி யாக (ZODIAC) அல்லது ராசி மண்டலமாக உள்ளது. எனவே ஒளியைப் பற்றிய, சூரியனைப் பற்றிக் கூறும் சாஸ்திரத்திற்கு ஐயோதிஷ சாத்திரம் என்று பெயரிட்டனர் பெரியோர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 + 1 =