சர்வாரி தமிழ் புத்தாண்டு அன்று வீட்டில் எப்படி பூஜை செய்ய வேண்டும்?

0
467

60 ஆண்டு சுழற்சி முறையில் சம்வத்சர சுழற்சியில் இன்று பிறக்கும் தமிழ் ஆண்டிற்கு பெயர் சர்வாரி என்று குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த ஆண்டு சப்தம திதி பூராடம் நட்சத்திரம் சித்திரை 1ல் பிறந்துள்ளது.

பூராடம் என்றால் சற்று போராட வேண்டி இருக்கும் ஆகையால் சற்று அலயச்சல் இருக்கும் அனைவருக்கும் இந்த ஆண்டு.

முதல் கடவுள்ளான் விநாயகர் வழிபாடு செய்வது நல்லது. இப்போது இருக்கும் சூழ்நிலையில் நாம் வழிபாடு செய்வது இயலாத நிலையில் உள்ளது.

ஆகையால் நாம் வீட்டில் இருந்தே வழிபாடு செய்தால் நமக்கு நன்மை கிடைக்கும்.

ஒரு தாம்பாளத்தில் இது போல் மஞ்சள், வாழைப்பழம், குங்குமம், பலாப்பழம், தங்க நகைகள், ரவிக்கை பிட்டு, 500ரூபாய் பணம் போன்றவற்றை சேர்த்து பூஜை அறையில் வைத்து, முகம் பார்க்கும் கண்ணாடி வைத்து கொண்டு இவை அனைத்தும் அந்த கண்ணாடி மூலம் நாம் பார்க்கவும்.

இப்படி செய்யத்தால் இந்த வருடம் முழுவதும் நோய் வராமல், செல்வம் பெருகும், குடும்ப வாழ்க்கை சிறப்பாக இந்த வருடம் அமையும்.

அனைவருக்கும் சுவாமி தரிசனம் சார்பாக தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 + 1 =