சம்பாதித்த பணத்தை வீட்டில் எங்கு வைக்கலாம்?

0
34

இன்றைய சூழ்நிலையில் பணம் சம்பாதிப்பது என்பது எவ்வளவு கடினமோ அதேபோல் பணத்தை சேமிப்பது கடினமாகவே உள்ளது.

வீட்டில் நாம் பணத்தை எந்த இடத்தில் எப்படி வைக்கவேண்டும் என்பதுதான் இந்த பதிவில் நாம் காணப்போகிறோம்.


வீட்டில் நாம் பணத்தை கண்ட இடங்களில் வைக்கக்கூடாது அதற்காக சில வாஸ்து வழிமுறைகள் இருக்கின்றன அது போலதான் நாம் பணத்தை அந்த முறைப்படி நம்ம வைத்தால் செல்வம் பெருகும் என்பது வாஸ்துவில் கூறப்பட்டது.

ஆம் பணத்தை நாம் ஒரு சிறிய வகையான மரப் பெட்டியில் வைப்பது ஒரு வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள் மரப்பெட்டியில் நாம் பணத்தை எப்போது சம்பாதித்தாலும் அதில் கொண்டு வந்து சேர்ப்பது போல் ஒரு வாய்ப்பை ஏற்படுத்துங்கள் அப்படி செய்தபோது நாம் பணத்தை பெருகக் கூடிய வாய்ப்பு அதிகமாகவே உள்ளது.

மரப்பெட்டி ஆனது பணத்தை ஈர்க்கும் சக்தி கொண்டதாகவே உள்ளது ஆகையால் நாம் பணத்தை சம்பாதித்த பிறகு அதில் கொண்டுவந்து சேர்த்து பாருங்கள் நீங்களே அதில் மாற்றத்தை அறியலாம்.

இப்போது அந்தப் பணப் பெட்டியை எந்த இடத்தில் வைப்பது என்பது சொல்கிறோம் பணப்பெட்டி என்பது ஒரு வகையான குபேரருக்கு உன்டான ஒரு பணம், ஆகையால் குபேர மூலை ஆக இருக்கக் கூடிய வடக்கு திசையை நோக்கி நாம் அந்த பண பெட்டியை வைக்க வேண்டும்.

அப்போதுதான் நாம் அந்த குபேரரின் ஆற்றலை நாம் பெற முழுமையாக அனுபவிக்க முடியும் ஆகையால் வீட்டில் உள்ள வடக்கு திசையை நோக்கி நாம் வைத்தால் நமக்கு பணம் பெருகும்அதேபோல்சில திசைகளில் நாம் பண பெட்டியை வைக்கக்கூடாது.

அது என்னவென்றால் தெற்கு திசை மற்றும் மேற்கு திசைஆனால் கிழக்கு திசையை பண பெட்டியை வைத்தால் நமக்கு மிகுந்த நன்மையும் தரும்.

வீட்டில் குழந்தைகள் உண்டியல் போன்ற பொருள்களை வைத்து இருப்பார்கள் அதில் ஒவ்வொரு நாளும் அவர்களுக்கு தகுந்தாற்போல் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய் போட்டு சேர்த்துக்கொண்டே இருப்பார்கள், பார்க்கப்போனால் ஒரு சில நேரங்களில் பார்த்தீர்களானால் அவர்கள் உண்டியலில் முழுமையாக நிரம்பி விடும் இதற்கு காரணம் அந்த உண்டியலில் ஈர்ப்பு சக்தியே.

அதேபோல் நாம் நமது மரப்பெட்டி வடக்கு திசையை நோக்கி நாம் வைத்தால் பணம் பெருகும் என்றும் வாய்ப்பு உள்ளது.

அதேபோல் பணப்பெட்டியை நாம் திசையை நோக்கி வைத்தாலும் அது வாசலுக்கு ஏற்றார்போல் நம் வைக்கக் கூடாது ஏனென்றால் பணம் என்பது ஒரு வகையான மறைமுகமான ஒரு பொருளாகும் அதை பார்ப்பதற்கு பார்வைகள் பட்டால் கண்திருஷ்டி ஏற்படும் இன்னும் சொல்லப்போனால் இவன் நன்றாக இருக்கின்றானே, இவனுக்கு எப்படி பணம் வருகிறது, போன்ற ஆட்கள் நாம் கண் பெற்றாலே நமது பணவீக்கம் நமது வீட்டில் பெருகிவிடும்.
அதைப் போக்குவதற்கு நாம் என்ன பண்ண வேண்டும் என்றால் பணப்பெட்டியில் எப்போதுமே ஒரு ரூபாய் காயின் வைத்திருக்கவேண்டும்.

இவ்வாறு வைத்திருந்தால் அந்த ஒரு ரூபாய் நாணயம் எப்பொழுதுமே குபேரருக்கு சொந்தமானதாக கருதப்படுகிறது.

பணப்பெட்டியை எப்போதுமே பூஜித்து வரலாம்மற்றொன்று தவறுதலாக மரப்பெட்டி நாம் எப்போதுமே கொண்டு போய் பூஜை அறையில் வைத்து இருக்க கூடாது ஏனென்றால் பூஜை அறையில் நாம் காணிக்கை செலுத்தும் இடமாகும் காணிக்கை செலுத்தும் இடத்தில் இந்தப் பெட்டியை கொண்டுபோய் வைத்தால் இறைவனுக்கு நாம் செலுத்த வேண்டிய தொகை ஆக மாறிவிடும்.

அதேபோல் பண பெட்டியை பீரோக்கள் வைத்தாலோ இல்ல தனியாக வைத்தாரோ நாம் அதை ஒரு வகையான வாசனை திரவியங்கள் கொண்டு சேர்த்து வைக்க வேண்டும் எடுத்துக்காட்டுக்கு அந்து உருண்டைகளை நாம் சேர்த்து வைக்கலாம் மனம் மகிழும் அளவிற்கு அந்தப் பணப் பெட்டியை இருந்தால்தான் குபேரன் வாசலில் வலம் வருவான்.

இவ்வாறு நீங்கள் செய்தால் பணம் பெருகும் வளமுடன் வாழலாம் நன்றி வணக்கம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 1 = 1