இறைவனுக்கு அபிஷேகங்கள் அர்ச்சனைகள் ஆராதனைகள் செய்வதும் விளக்கம் என்ன?

0
384

பகவத் கீதையில் பகவான் நீ எதை செய்தாலும் எதைச் சாப்பிட்டாலும் எதை ஹோமம் செய்தாலும் எதைக் கொடுத்தாலும் எந்த தவத்தை செய்தாலும் அதை எல்லாம் எனக்கு அர்ப்பணமாக செய் என்று கூறியுள்ளார் நாம் உண்ணும் உணவை இறைவனுக்குப் படைப்பது நாம் உடுத்தும் துணியைக் இறைவனுக்கு உடுத்தி பிறகு நாம் உடுத்துவதும் நாம் கட்டும் வீட்டை அவன் கோயிலாக கருதப்படும் சிறந்த தெய்வ ஆராதனை ஆகும் நாம் நீராடி மகிழ்வது இறைவனுக்கு அபிஷேகம் செய்து மகிழ்கிறோம் உண்ணும் சோறும் பருகும் நீரும் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் என்கிறார் நம்மாழ்வார் இவை அனைத்தும் உன்னத மனிதனின் இயல்பான வெளிப்பாடுகள் இந்த ஆராதனை முறை வெளி நாள்களாக நமது வழிபாட்டு சம்பிரதாயம் உலக வழக்கில் நமது மரியாதைக்கு உரியவர்கள் அன்பிற்கு உரியவர்கள் உறவினர்கள் என்ற நிலையில் இருப்பவர்களுக்கு நாம் ஏதேனும் வாங்கி கொடுக்க நினைக்கிறோம் வாங்கியும் கொடுத்து இருக்கிறோம் அது போன்ற எல்லா உறவுகளையும் ஒட்டுமொத்தமான உறவான சரியாக சொல்லப்போனால் உண்மையில் உள்ள ஒரே உறவான நம் இறைவனோடு குறிப்பிட்ட வழிமுறைகளை அனைத்தின் மூலமாகவும் நாம் தொடர்பு கொள்கின்றோம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 88 = 93