இரவு தூக்கம் வரவில்லையா? இதை படியுங்கள்.

0
131

நம்முடைய வாழ்க்கை முறை பசி, தாகம், தூக்கம் இவை மூன்றையும் உள்ளடக்கியது. இதில் முதல் இரண்டை மற்றும் சரியாக செய்வோம் ஆனால் மூன்றாவதாக இருக்கும் தூக்கத்தை நாம் ஒருபோதும் கடைபிடிபதில்லை.

காரணம் இப்போது உள்ள குடும்ப சூழ்நிலை. இரவு நேரத்தில் வேலை பார்ப்பது, சமூக வலைத்தளங்களில் அதிக நேரத்தை செலவு செய்வது.

வேலை பார்ப்பதை கூட ஒரு வகையில் ஒத்துக்கொள்ளலாம் ஆனால் இரவு நேரங்களில் கைபேசியில் பேசுவது, youtube , facebook போன்றவற்றை பார்த்து நாம் பல விதமான நோய்களை வாங்கிக்கொன்று இருக்கின்றோம்.

மூன்றில் ஒரு பகுதி நாம் தூக்கத்தில் வாழ்வினை களிக்கின்றோம்.உடலில் உள்ள அனைத்து செல்களும் புடிப்பிக்கப்பட நேரம் இரவு தான். அப்போது தூக்கம் இல்லாமல் நாம் இருந்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக காணப்படும்.

நாம் தூங்கினால் தான் ஐயும் புலன்களும் ஆற்றல் கொண்ட நம்மை பாதுகாக்கும்.

இப்போது எப்படி தூங்க வேண்டும் என்று பார்ப்போம்.

நாம் தூங்கும் போது இரண்டு கால்களையும் முழுமையாக நீட்டி, மல்லாந்து பார்த்து நிமிர்ந்து படுத்து தூங்கக்கூடாது. முழுமையாக மல்லாந்து பார்த்து நிமிர்ந்த படி உறங்கினால் உடலுக்குத் தேவையான ஆக்சிஜன் முழுமையாக கிடைக்காமல் குறட்டை வரும். ஒரு பக்கமாக ஒருக்களித்து படுத்து ஒரு கையை தலைக்கு அடியில் வைத்துக் கொண்டு, கால்களை நீட்டி தூங்குவது மிகவும் நல்ல முறையாக சொல்லப்பட்டுள்ளது. அதிலும் இடது கை, உங்கள் தலைக்கு கீழ் பக்கமும், வடதுகை உடம்பின் மேல் பக்கமும் இருக்கும்படி தூங்குவது மிகவும் சிறந்தது. இடது பக்கமாக ஒருக்களித்து தூங்க வேண்டும்.

இடது பக்கம் ஒருக்களித்து படுப்பது மூலம், நம்முடைய மூக்கில் சுவாசம் சூரியகலையில் இயங்கும். இதன்மூலம் எட்டு அங்குலம் மட்டுமே சுவாசம் வெளியேறுவதால் நம்முடைய ஆயுள் பலம் நீடிக்கும்.  இரவு நேரத்தில் ஜீரண சக்தியானது அதிகரிக்கப்பட்டு நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதயம் சீராக இயங்கும்.

ஒரு மனிதன் இவ்வாறாக இரவு தூக்கத்தை முறையாகத் தூங்கினால் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து நம்மை நாமே காத்துக் கொள்ளலாம்.பகல் தூக்கம் கூடாது என்பதை நினைவுகூர தான் இந்த பதிவு.

இதுபோன்ற மேலும் அறிந்துகொள்ள நமது Facebook page பின் தொடரவும்.

Link : www.facebook.com/swamydharisanam

Website: www.swamydharisanam.com

Android App: https://play.google.com/store/apps/details?id=com.mcc.swamydharisanam

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 82 = 88