இன்று பங்குனி உத்திரம் எப்படி விரதம் இருப்பது?

0
355

தமிழ் மாதம் 12 வது பங்குனி மாதமாகும் அதில் 12வது நட்சத்திரம் உத்திரம் நட்சத்திரம் ஆகும், இது முருகனுக்கு உகந்த நாள் ஆகும்.

இப்போது இருக்கும் வைரஸ் சூழ்நிலையில் நாம் கோவிலுக்கு செல்ல முடியாத நிலை இருப்பதால் நாம் எப்படி வீட்டிலே பூஜை செய்யவது என்று பார்ப்போம்.

பங்குனி உத்திரம் நாள் என்பது ஒரு வகையான கல்யாண நாள் என்றும் கூறுவர், ஆம் இந்நாளில் தான் சிவன் பார்வதி, முருகன் தெய்வானை, திருமால் மகாலட்சுமி, பிரம்மா சரஸ்வதி, மீனாட்சி சுந்தரேஸ்வரர்,ராமர் சீதை போன்ற பல தெய்வங்கள் திருமண நாள் இந்த நாள் தான்.

திருமணம் ஆகாத பெண்கள் இன் நன்னாளில் முறையாக விரதம் இருந்தால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கீளே உள்ள படத்தை போல் பச்சரிசியை கொண்டு படம் வரைந்து சரவணபவ என்று எழுதவும். அதன் பின் ஒரு 1 ரூபாய் ஓம் என்ற எழுத்தில் மேல் வைத்து பூஜை செய்யவும்

முன்னோர் காலத்தில் எல்லா தீராத நோய்கள் வந்தால் 1 ரூபாய் வைத்து வழிபாடு செய்வார்கள், உடனே தீர்ந்து வீடும், அதே போல் தான் இன்று நமக்கு வந்து இருக்கும் உலக பிரச்சனை, வீடு பிரச்சினை மற்றும் திருமணம் ஆகாமல் இருக்கும் பிரச்சனை போன்றவற்றை இந்த நாள் தீர்க்க கூடிய நாளாக கருதப்படுகிறது.

நாளை வரைபடம் போட்ட பச்சரிசியை அரைத்து வீட்டு வாசலில் கோலம் போடவும் இது நம் மகாலட்சுமியை வீட்டிற்கு அழைப்பது ஒன்றாகும்.

அதன்பின்பு முருகப்பெருமானுக்கு உங்களால் முடிந்த நைய்வேதியம் வைத்து, தீப, தூப ஆராதனை செய்து உங்களுடைய பூஜையை நிறைவு செய்து கொள்ளலாம். இந்தப் பூஜையை வீட்டிலிருக்கும் யார் வேண்டுமென்றாலும் செய்து வேண்டிக் கொள்ளலாம். பச்சரிசியின்மேல் வைத்த ஒரு ரூபாய் நாணயத்தை, மஞ்சள் துணியில் முடிந்து, உங்களது பூஜை அறையிலேயே வைத்து விடுங்கள்.

நமக்கு இருக்கும் பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து எப்போது கோயிலுக்கு செல்லும் பாக்கியம் கிடைக்கின்றதோ, அந்தநாளில் அந்த ஒரு ரூபாயை எடுத்து முருகன் கோவில் உண்டியலில் சேர்த்து விடுங்கள். நம்முடைய ஒவ்வொருவரின் வீட்டிலும் இந்த பங்குனி உத்திரத்தை முருகப்பெருமானை வீட்டிலிருந்தே இந்த முறைப்படி வழிபடுவோம். எல்லோருக்கும் விடிவுகாலம் நிச்சயம் பிறக்கும் என்ற நம்பிக்கையோடு வழிபடுவோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

85 + = 88