ஆவணி மாத அவிட்ட நட்சத்திர திருநாளில் பூணூல்

0
787

#ஆவணி மாத அவிட்ட நட்சத்திர திருநாளில் பூணூல் அணிபவர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு பக்திபூர்வமான பண்டிகை இது இந்த நாளில் பழைய பூணூலை கழற்றிவிட்டு புதிய பூணூல் அணிந்து கொள்வர்.

நயனம் என்றால் கண். நமக்கு இரண்டு நயனங்கள் (கண்கள்)இருக்கின்றன. அவை ஊனக் கண்கள். இது தவிர மூன்றாவதாக ஒரு கண்தேவை.

அது தான் ஞானக்கண். அக்கண்ணைப் பெறுவ தற்கான சடங்குதான்உபநயனம். உபநயனம் என்றால் துணை க்கண் என்று பொருள். ஞானம்என்னும் கல்வி அறிவை பெற்றால் மட்டுமே ஒருவன் கண் பெற்ற பயனைப் பெறுகிறான் என்று தெய்வப்புலவர் திருவள்ளுவர் குறிப்பிடு கிறார். கடவுளைப் பற்றி அறியும்அறிவே உயர்ந்த அறிவாகும். அதனால் பூணூல் அணியும் சடங்கினை பிரம்மோபதேசம் என்று குறிப்பிடுவ துண்டு.

மகா விஷ்ணு பூலோகத்தில் பல அவதாரங்களை எடு த்து தர்மத்தை நிலைநாட்டினார். அதில் வாமன அவதாரமும் ஒன்று. அதிதி காஷ் யபரின் பிள்ளையாகஅவதரித்த வாமன மூர்த்திக்கு சூரியபகவானே உபநயனம் (பூணூல் அணிவித்தல்) செய்தார். பக வானே பூணூல் அணிந்து கொண்டதன் மூ லம், இச்சடங்கின் சிறப்பினை உணரமுடியும்.

பூணூலையக் ஞோபவீதம் என்று அழைப்பர். இதற்கு மிகவும் புனிதமானது என்று பொருள். பூணூல் அணிபவர்களும், அதனைத் தயாரிப் பவர் களும் ஆச்சார அனுஷ் டான ங்களில் இருந்து சிறிதும் விலகுதல் கூடாது. ஆவணி அவிட்டத்தன்று பூணூல் அணியும் இளைய தலைமுறையினரும் இதன் முக்கியத் துவத்தை உணர்வது அவசியம். இதை குருமுகமாகத் தான் செய்ய வேண்டும். வீட்டில் குருக்களை வைத்து காயத்ரி மந்திரம் ஜபித்து பின் பூணூல் போடுவார்கள் இப்போதெல்லாம் சிறு குழந்தைகள் முதல் வயதான பெரியவர்கள் வரை குழுக்களாகக் கோவிலுக்குச் சென்று அனைவரும் குருக்கள் உதவியுடன் புதிய பூணூல் அணிந்து கொள்கின்றனர்.

மூன்று வயது முதல் ஐந்து வயதிற்குள் ஆண் குழந்தைகள் குருமுகமாக காயத்ரி மந்திரம் ஓதி, குழந்தையை தந்தை மடிமீது அமர வைத்து முதன் முதலாகப் புதிய பூணூல் போட்டு விடுவார்கள். இதை ஒரு திருமண விழா போலவே கொண்டாடுவார்கள். சிலர் தன் உறவினர் வீட்டுத் திருமண விழாவில் மணமகள் அமர்ந்த மேடையில் அமர்த்தியும் செய்து விடுவார்கள் (செலவும் சிரமமும் குறைவு) இதற்கு உபநயனம் என்று பெயர் உபநயனம்செய்து புதிய பூணூலை அணிந்துகொண்டபின், தினமும் காயத்ரி ஜபத்தை மூன்று முறை தவறாமல் ஓத வேண்டும்.

வருடம் ஒருமுறை ஆவணி அவிட்டத்தன்று புதிய பூணூல் அணிந்துகொள்ள வேண்டும்.

பூணூல் அணிவிக்கும்போது குரு சொல்லித் தரும் ஜபம் ‘ ஓம், பூர்புவ, சுவஹ, தத், ஸவிதுர், வரோண்யம், பர்கோ, தேவஸ்ய, தீமஹி, தியோ யோந, ப்ரசோதயாத்’ என்பதாகும். இம்மந்திரத்தை தினம் மூன்று வேளை கை மேல் துணி போட்டு மூடி 108 அல்லது 1008 முறை ஜெபிக்க பாவம் நிவர்த்தியாகும்.

சுண்டு விரல் அடியிலிருந்து ஒவ்வொரு கணுவாக எண்ணி (3), மோதிர விரல் நுனி (1), நடுவிரல் நுனி (1), ஆட்காட்டிவிரல் நுனி (1), கட்டை விரல் இரண்டு கணு (2) ஆள்காட்டி விரலின் கீழ்க்கணு (1), நடுவிரலின் கீழ்க்கணு (1), மோதிர விரல் கீழ்க்கணு (1) என்று மொத்தம் 11 எண்ணிக்கையில் எண்ணி இந்த மந்திரத்தை ஓத வேண்டும் ‘ ஓம், பூர்புவ,சுவஹ’ என சொல்லிக் கொண்டே எண்ணினால் 11 சொற்கள் வரும்.

இம்மந்திரம் உள்ளத்தை இதமாக்கும் மந்திரங்களிலேயே மிகவும் உயர்வான மந்திரம் இது வேதங்களின் தாய் காயத்ரி இந்த மந்திரம் வேத மந்தரங்களில் சிரேஷ்டமானது. இது பாவங்களைப் போக்கும். நல்ல ஆரோக்கியம், அழகு பலம், வீரியம், பிரும்ம தேஜஸ் முதலானவற்றைத் தருகிறது.

மனதைப் பரிசுத்தப்படுத்துகிறது. ஜபிப்பவர்களுக்கு அஷ்டமா சித்திகளைக் கொடுக்கிறது. சக்தி மானாகவும் புத்திமானாகவும் ஆக்குகிறது. காலையில் கிழக்குமுகமாக சூரியனைப் பார்த்து நின்று கொண்டு, வஸ்திரத்தால் இரு கைகளையும் மூடி முகத்திற்கு நேராக வைத்து காயத்ரி மந்திரத்தை ஜபிக்க வேண்டும். மதியம் கிழக்கு முகமாக அமர்ந்து கைகளை மார்பிற்கு நேராக வைத்து ஜபிக்க வேண்டும்.

மாலையில் மேற்கு முகமாக அமர்ந்து நாபிக்குச் சமமாக கைகளை வைத்து ஜபிக்க வேண்டும் வட இந்தியாவில் பிராமணர் அல்லாதவரும் பூணூல் போடுவர் தமிழகத்தில் நாட்டுக்கோட்டை செட்டியாரும் பூணூல் போடுவர் ஆச்சாரி எனப்படும் நகை செய்பவரும் பூணூல் போடுவர் குஜராத்தில் ஏறக்குறைய எல்லோருமே பூணூல் போடுகிறார்கள் உபநயன‌ம் செ‌ய்து பூணூல் அ‌ணி‌ந்து கொ‌ண்டவ‌ர்க‌ள் த‌ங்களது பூணூலை புது‌ப்‌பி‌த்து‌க் கொ‌ள்ளு‌ம் ப‌ண்டிகைஆவ‌ணி அ‌வி‌ட்டமாகு‌ம். ஆவ‌ணி அ‌வி‌ட்ட‌ம் இ‌ந்த ஆ‌ண்டு ஆடி மாத‌‌ம் பெள‌ர்ண‌மி நா‌ளி‌ல் வ‌ந்து‌ள்ளது. ஆவணி மாத பவுர்ணமியை ஒட்டி வரும் அவிட்ட நட்சத்திரத்தில் இந்த விரதம் மேற்கொள்ளப்படுகிறது.

இவ்வேளையில் முறையாக காயத்ரி உபதேசம் பெற்றவர்கள், தங்களுடைய பழைய பூணூலை எடுத்துவிட்டு புதிய பூணூலை அணிந்து கொள்வர். திருமணம் ஆகாதவர் ஒரு முடியையும் (ஒரு பூணூல்), திருமணம் ஆனவர் இரண்டு முடி (இரண்டு பூணூல்), திருமணம் ஆனபின் தந்தையை இழந்தவர் மூன்று முடிகளையும் (மூன்று பூணூல்) அணிந்து கொள்வர்.

இவ்வாறு பூணூல் அணிபவர்கள் தினமும் காலை, மதியம், மாலை மூன்று வேளையும் காயத்ரி மந்திரம் சொல்ல வேண்டும். விரத முறை: கணபதி பூஜையுடன் இவ்விரதத்தை துவங்கி, புண்யாவாகனம் செய்த பின், பஞ்சகவ்யம் அருந்தி உடல், மனம், இருப்பிடங்களைத் சுத்தமாக்கிக் கொள்ள வேண்டும். இவ்வேளையில் கிழக்கு நுனியாக வாழை இலை போட்டு, அதில் அரிசி பரப்பி 7 கொட்டைப் பாக்குகள் வைத்து, அதில் சப்தரிஷிகளை ஆவாஹனம் செய்து, தீபாராதனை செய்து, நைவேத்தியம் படைக்க வேண்டும். பின், சப்தரிஷிகளை வேண்டி ஹோமம் செய்ய வேண்டும்.

அதில் அரசு அல்லது புரசு சமித்துக்கள் (குச்சிகள்), சத்துமாவு, நெய், நெல்பொரி ஆகியவற்றை மந்திரம் சொல்லி அக்னியில் இட வேண்டும். பின், புதிய பூணூல் அணிந்து கொள்ள வேண்டும். இவ்வேளையில் பஞ்சபூதங்களையும் வழிபடலாம். திருமணம் ஆகாத ஆண்கள் பூணூலை குருவிற்கும், வயதில் மூத்தோருக்கும் தானமாகத் தரலாம். புதிய பூணூல் அணிந்த அனைவரும் முதலில் தேவர்களுக்கும், பின்னர் ரிஷிகளுக்கும் தர்ப்பணம் செய்கின்றனர். இவர்களில் தந்தையை இழந்தவர்கள் தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும் தர்ப்பணம் செய்தபிறகு தங்களுடைய பிதுர்களுக்கும் தர்ப்பணம் செய்ய வேண்டும்.

இதற்கு பிறகு குருவிற்கும், வயதில் மூத்தோருக்கும் வெற்றிலை பாக்கு, பழம் மற்றும் அவர்கள் சக்திக்குத் தகுந்தாற்போல் காணிக்கைகளை அளித்து அவர்களின் ஆசிர்வாதம் பெற வேண்டும். பலன்: இவ்விரதம் இருந்து பூணூல் அணிந்து கொண்டவர்களை செய்பவரை எவ்வித துன்பமும் நெருங்காது. எதிரிகளின் தொல்லை குறையும். .

ஆவணி அவிட்டம் என்பது ஒரு ஆண்டுச் சடங்காகு‌ம். உபநயனம் செய்து கொண்ட பிராமணர் ஆடி அல்லது ஆவணி மாதங்களில் அவிட்டம் நட்சத்திரத்தினோடு கூடிய பௌர்ணமியில் கடைபிடிக்கும் வழிபாடாகும். மு‌ன்பெ‌ல்லா‌ம் ஆவணி மாதம், அவிட்டம் நட்சத்திரத்தில் ஆவணி அவிட்டம் கொண்டாடப்பட்டு வந்தது.

திதி, நட்சத்திரங்கள், கிரக நிலைகள் மாறும் போது சில சமயம் ஆவணி அவிட்டம் ஆடி மாத்திலும் வருவது உண்டு. அதுபோ‌ல்தா‌ன் இ‌ந்த ஆ‌ண்டு‌ம் ஆவணி அவிட்டம் ஆடி மாதம் வந்துள்ளது. ஆவ‌ணி அ‌வி‌ட்ட‌‌ம் எ‌ன்பது ரிக், யசுர் வேதிகள் கொண்டாடும் தினமாகும். சாம வேதிகள் பிள்ளையார் சதுர்த்தி தினத்தில் கொண்டாடுவர். இது ஓர் கூட்டுவழிபாடு ஆகும். இந்நாளில் அனைவரும் ‌நீ‌ர் ‌நிலை‌யி‌ன் கரை‌யி‌ல் அதாவதுஆற்றங்கரையிலோ குளக்கரையிலோ குளித்துலோ இத்தகைய சடங்கினை உருவாக்கிய இருடிகளுக்கு நன்றி கூறி தர்ப்பணம் செய்வர். தந்தை இல்லாதவர்கள் தங்கள் மூதாதையருக்கு எள்ளும் அரிசியும் நீரில் கொடுத்து தர்ப்பணம் செய்வர்.

பின்னர் தாங்கள் அணிந்துள்ள பூணூலைப் புதுப்பிப்பதோடு தங்கள் வேதங்களைப் படிக்கவும் தொடங்குவர். இந்த பூணூலும் கள்ளப்பூணூல், பிரம்மச்சாரி பூணூல், கிரஹஸ்தர் பூணூல், சஷ்டிஅப்த பூர்த்தி பூணூல் என்று 4 வகைப்படும். சம‌ஸ்கிருதத்தில் இதனை உபாகர்மா எ‌ன்று கூற‌ப்படு‌கிறது .இதன் பொருள் தொடக்கம் எனபதாகும். இன்றைய தினம் வேதங்களை படிக்க துவங்க நல்லநாள் எனக் கொள்ளலாம். இ‌ந்த பூணூ‌ல் போடு‌ம் சட‌ங்கு ‌‌பிராமண‌‌ர்க‌ள் ம‌ட்டு‌ம் அ‌ல்லாம‌ல் வேறு பல சமுதாய‌த்‌தினரு‌ம் கடை‌பிடி‌க்‌கி‌ன்றன‌ர்.

பூணூல் போட்டுக்கொள்ளும் ஆண் பாலகன் அந்தஸ்திலிருந்து பிரம்மச்சாரி அந்தஸ்த்திற்கு உயர்த்தப்படுகிறான். அதன் பின் அவன் வேதங்கள் கற்றுத்தேற வேண்டும். பிரம்மச்சாரிய விரதத்தை கடைபிடிக்க வேண்டும். உபநயன ‌விழா நடத்தி பூணூல் போடப்பட்டுவிட்டால் அதை கழற்றக் கூடாது. ஆனால், விழா ஏதுமினறி ஆவணி அவிட்டம் தினத்தன்று மட்டும் சாஸ்திரத்துக்காகப் போடப்படும் பூணூலை கழற்றி விடலாம். இதை‌த்தா‌ன் க‌ள்ள‌ப் பூணூ‌ல் எ‌ன்‌கிறா‌ர்க‌ள். திருமணமாகாதவர்களுக்கு பிரம்மச்சாரி பூணூல் போடப்படும், பிரம்ச்சாரி பூணூலிலும், கள்ளப் பூணூலிலும் 3 நூல்கள் இணைத்து கட்டப்பட்டு அதன் நடுவில் பிரம்ம முடிச்சு போடப்பட்டிருக்கும்.

திருமணமானவர்களுக்கான கிரஹஸ்தர் பூணூ‌ல் போட‌ப்படு‌ம். இ‌தி‌ல் 6 நூல்கள் இணைந்து கட்டப்பட்டிருக்கும். 60 வயதான பின், சஷ்டி அப்த பூர்த்தி என்று அழைக்கப்படும் அறுபதாம் கல்யாணம் முடிந்தவர்களுக்கு சஷ்டி அப்தி பூணூல் அணிவிக்கப்படும. இதில் 9 நூல்கள் இணைத்து கட்டப்பட்டிருக்கும்.

ஆவணி அவிட்ட தினத்தன்று ஆற்றங்கரையில் சென்று (இல்லை என்றால் வீட்டில் குளித்துவிட்டு) நீராடிவிட்டு அவரவர்கள் குல வழக்கப்படி பூஜைசெய்துவிட்டு பழைய பூணூலை கழற்றி விட்டு புதிய பூணூலை அணிந்து கொள்வார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

91 − = 85